தனுஷ் படத்தில் பிக்பாஸ் பிரபலம்...போட்டோவுடன் அப்டேட் வெளியிட்டு அசத்தல்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான டைரக்டர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது நடிகராகவும் அறிமுகமாகி கலக்கி வருகிறார். இவர் பல திறமையான நடிகர், நடிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Recommended Video

Grayman 2வில் Dhanushக்கு முக்கிய Character? | Russo Brothers சொன்னது என்ன?

தனது தம்பி தனுஷை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தற்போது தனுஷ் உலக அளவில் பிரபலமான ஸ்டாராக மாறி உள்ளார்.தற்போதும் பல படங்களை இயக்கி, பல நடிகர் - நடிகைகளை அறிமுகம் செய்து வருகிறார்.

தற்போது தனுஷ், இந்திரஜா ரவிச்சந்திரன் நடித்துள்ள நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். பிரபு, செல்வராகவன், யோகிபாபு, ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனுஷ் படத்தில் பிக்பாஸ் பிரபலம்

தனுஷ் படத்தில் பிக்பாஸ் பிரபலம்

தற்போது பிக்பாஸ் பிரபலமான ஆஜித்தை நானே வருவேன் படத்தில் செல்வராகவன் அறிமுகம் செய்துள்ளார். ஆஜித், சூப்பர் சிங்கர் 3 ல் டைட்டில் வென்றவர். பிக்பாஸ் சீசன் 4 ல் 100 நாட்களுக்கு மேல் இருந்து, இறுதிப் போட்டி வரை சென்றார்.

போட்டோவுடன் அப்டேட்

போட்டோவுடன் அப்டேட்

நானே வருவேன் படத்தில் ஆஜித் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். இதை செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பகிர்ந்து, சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். நானே வருவேன் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த போட்டோ செம வைரலாகி வருகிறது.

அடுத்த அப்டேட் எப்போ

அடுத்த அப்டேட் எப்போ

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் நானே வருவேன். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரிலீஸ் பிளான் இதுவா?

ரிலீஸ் பிளான் இதுவா?

நானே வருவேன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹீரோ, வில்லன் என இரு ரோல்களில் தனுஷ் நடித்துள்ளதாக சொல்லப்படும் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நானே வருவேன் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை அமெசான் பிரைம் வீடியோவும் வாங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X