»   »  செல்வராகவன்- சந்தோஷ் நாராயணன்... கோலிவுட்டின் புதிய கூட்டணி!

செல்வராகவன்- சந்தோஷ் நாராயணன்... கோலிவுட்டின் புதிய கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஹிட் படங்கள், பாடல்கள் தந்தவர்களில் யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன் கூட்டணிக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால் புதுப்பேட்டைக்குப் பிறகு இந்தக் கூட்டணி முறிந்தது.

அதன் பிறகு ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களுடன் கூட்டணி அமைத்துப் பார்த்தார் செல்வா.

Selvaraghavan joins with Santhosh Narayanan

ஆனால் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் யுவனுடன் கூட்டணி போட்டு, சிம்புவை வைத்து கான் என்ற படத்தைத் தொடங்கினார் செல்வராகவன். ஆனால் அதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

கெளதம் மேனன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வா.

கோலிவுட்டில் இப்போது உச்ச இடத்தில் உள்ள சந்தோஷ் நாராயணன் தற்போது ரஜினி நடித்து வரும் 'கபாலி' படத்துக்கும் விஜய்யின் 60வது படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.

English summary
For the very first time director Selvaraghavan is joining hands with music director Santhosh Narayanan for his next movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil