ஹீரோவும் நான் தான்; வில்லனும் நான் தான்...நானே வருவேன் அசத்தல் போஸ்டர்கள் வெளியீடு

சென்னை : தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

Selvaraghavan released Naane Varuven new posters

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

Recommended Video

Grayman 2வில் Dhanushக்கு முக்கிய Character? | Russo Brothers சொன்னது என்ன?

சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

சில நாட்களுக்கு முன் நானே வருவேன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தது என தனுஷ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன."நானே வருவேன்" படத்திற்கு செல்வராகவன் டப்பிங் பேசி போட்டோக்கள், தனுஷ் டப்பிங் பேசிய போட்டோக்களை சமீபத்தில் செல்வராகவன் பகிர்ந்தார். இதன் மூலம் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது உறுதியாகி உள்ளது.

நானே வருவேன் படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபஸ்ட்லுக் போஸ்டர்களில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போட்டோக்கள் சர்ச்சையானது.

நானே வருவேன் படத்தின் டிஜிட்டல் வெளியிட்டு உரிமம் அமேசான் பிரைம் வீடியோவிற்கும், சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கும் விற்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளதாகவும், அதில் ஒரு பாடலை செல்வராகவனே எழுதி உள்ளதாகவும், மீதமுள்ள 3 பாடல்களை யுகபாரதி எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் என எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தனுஷின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான திருச்சிற்றம்பலம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பட்டியலில் அடுத்துள்ள படம் நானே வருவேன். இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் படத்தின் புதிய போஸ்டர்கள் இரண்டை செல்வராகவன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம் என இரு விதமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் கண்ணாடி, லைட்டாக நரைத்த தாடி, தலையில் குள்ளா, குனிந்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் தனுஷ்.

மற்றொன்றில் தாடி, மீசை இல்லாமல் சிறு வயது போன்ற லுக்கில், ஏைதயோ பரிதாபமாக பார்த்தபடி நிற்கும் தனுஷ் என இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று வில்லன் கேரக்டர். மற்றொன்று ஹீரோ கேரக்டர் என தெரிகிறது. அறிவிப்பே இல்லாமல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் நானே வருவேன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X