ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ ஆரம்பம்.. செல்வராகவன் சொன்ன அசத்தல் அப்டேட்.. அப்போ ஹாட்ரிக்கா?

சென்னை: துள்ளுவதோ இளமை படத்திற்கு கதை எழுதி தம்பியை ஹீரோவாக மாற்றி அழகு பார்த்ததே அண்ணன் செல்வராகவன் தான்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

இன்றோ பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருகிறார் நடிகர் தனுஷ். அண்ணன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இப்பவும் உள்ளன.

இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை படங்கள் எப்போ ஆரம்பம் ஆகும் என்கிற கேள்விக்கும் அசத்தலாக பதில் அளித்துள்ளார் செல்வராகவன்.

மீண்டும் அண்ணன் உடன்

மீண்டும் அண்ணன் உடன்

இயக்குநர் செல்வராகவன் உடன் இணைந்து நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு அண்ணன் இயக்கத்தில் நடிக்க முடியாத சூழலில் தற்போது மீண்டும் அண்ணனுக்கு கால்ஷீட் வாரி வழங்கி உள்ளார் நடிகர் தனுஷ். நடிகராக மாறி உள்ள செல்வராகவன் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறாராம்.

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ

நானே வருவேன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நூலகம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு வந்த இயக்குநர் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எப்போ வரும்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுபினர். அதற்கு பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன் விரைவில் அந்த படம் ஆரம்பிக்கும் என்றார். மேலும், ஒரு சூப்பர் அப்டேட்டையும் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்

முதலில் இந்த படம் தான்

முதலில் இந்த படம் தான்

ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2க்கு முன்பாக புதுப்பேட்டை 2 படம் தான் வரப் போவதாக அதிரடியாக கூறி விட்டார். முன்னதாக 2024ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. அப்போது புதுப்பேட்டை 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், புதுப்பேட்டை 2 படத்தை முடித்து விட்டு அடுத்தபடியாக ஆயிரத்தில் ஒருவன் 2வை ஆரம்பிக்கலாம் என்கிற முடிவில் உள்ளார் செல்வராகவன் என்பது தெளிவாகி உள்ளது.

ஆரம்பமே 2024ல் தானா

ஆரம்பமே 2024ல் தானா

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகத்திலேயே தனுஷ் தான் நடிக்க வேண்டியது. மேலும், இரண்டாம் உலகம் படத்திலும் அவர் சில நாட்களுக்கு நடித்து விட்டு பின்னர் பின் வாங்கினார். இந்நிலையில், நானே வருவேன், புதுப்பேட்டை 2 படங்களின் சோதனை ஓட்டத்தை பார்த்து விட்டு ஆயிரத்தில் ஒருவன் 2க்கு போகலாம் என தனுஷ் சொல்லி உள்ளாரா? 2024ல் தான் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆரம்பமே ஆகுமா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X