For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  18 Years of 7G Rainbow Colony: நினைத்து நினைத்துப் பார்த்தாலும் மறக்க முடியாத காதல் கொண்டாட்டம்!

  |

  சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

  ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் 2004 அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி வெளியாகி 18 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  7ஜி ரெயின்போ காலனியும்.. நா.முத்துகுமாரின் வைர வரிகளும்.. 18 ஆண்டுகளை கடந்த படம்! 7ஜி ரெயின்போ காலனியும்.. நா.முத்துகுமாரின் வைர வரிகளும்.. 18 ஆண்டுகளை கடந்த படம்!

  காதல் இல்லையேல் சாதல்

  காதல் இல்லையேல் சாதல்

  காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனியில் உச்சம் தொட்டார் எனலாம். காதல் இல்லையேல் சாதல் என்ற ஒருவரிக் கதையை விடலைப் பருவ சேட்டைகளின் பின்னணியில் ஜாலியான திரைக்கதையில் இயக்கியிருந்தார் செல்வராகவன். படம் தொடங்கி க்ளைமேக்ஸ் காட்சி வரும் வரையிலும் காதலின் கொண்டாட்டத்தை திரையில் காட்டிய இந்தப் படம், இறுதிக் காட்சியில் ரசிகர்களின் மனதை உலுக்கி எடுத்துவிடும். ஆம்! அவ்வளவு தான் 7ஜி ரெயின்போ காலனி செய்த மாயங்களை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் முடியும்.

  தந்தை மகன் உறவு

  தந்தை மகன் உறவு

  படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணாவிற்கு இதுதான் முதல் படம், அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். ரவி கிருஷ்ணாவின் நடிப்பில் அப்படியே செல்வராகவன் தான் கண்ணுக்குள் நின்றார். அதைவிடவும் ரவி கிருஷ்ணாவின் அப்பாவக நடித்திருந்த மறைந்த மலையாள நடிகர் விஜயன், ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஸ்கோர் செய்திருப்பார். ஊதாறியாக சுற்றித் திரியும் மகனை நினைத்து கண்கலங்குவதும், அதன் பின்னர் காதல் தோல்வியிலும் தனது பொறுப்புகளை சுமந்து நிற்கும் போது, மகனின் வலியை புரிந்துகொண்டு அரவணைப்பதும் செல்வராகவனின் கிளாஸிக்கல் டச்.

  ரவி கிருஷ்ணாவும் சோனியா அகர்வாலும்

  ரவி கிருஷ்ணாவும் சோனியா அகர்வாலும்

  சீண்டல், கிண்டல், கெஞ்சல், கோபம், முறைப்பு, வெறுப்பு எனத் தொடங்கும் ரவி கிருஷ்ணா, சோனிய அகர்வால் சந்திப்பு, இரண்டாம் பாதியில் அப்படியே காதல், முத்தம், கொஞ்சல், உத்வேகம் என மனித உணர்வுகளின் ஒவ்வொரு படிநிலையாக கடந்து சென்று கூடலில் திளைத்து நிற்கும். ஆனால், சோனியா விபத்தில் இறந்துவிடவே உடைந்து நிற்பது ஹீரோ ரவிகிருஷ்ணா மட்டும் அல்ல, திரை முன் அமர்ந்திருந்த ரசிகர்களும் தான். ரவி கிருஷ்ணாவின் நண்பர்கள் கேரக்டரும், சோனியா அகர்வாலின் அம்மா பாத்திரமும் கதைக்கு தேவையான பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கும். சோனியா அகர்வாலின் அப்பாவுக்காக, அவள் விருப்பப்பட்டு தான் தன்னுடன் வந்தால் என்பதை ரவி கிருஷ்ணா மறைத்ததும், அவரது தலையில் கைவைத்து சோனியாவின் அம்மா ஆசிர்வாதம் செய்யும் காட்சி செல்வராகவனின் இன்னொரு கிளாஸிக் டச்.

  யுவனின் அல்டிமேட் மேஜிக்

  யுவனின் அல்டிமேட் மேஜிக்

  7ஜி ரெயின்போ காலனி படத்தின் வெற்றியில் மிகப் பெரிய பங்கு யுவனின் இசை தான். படம் தொடங்கியதும் "நாம் வயதுக்கு வந்தோம்" என இசை விருந்து படைத்த யுவன், 'கண் பேசும் வார்த்தைகள்', 'ஜனவரி மாதம்', 'கனாக் காணும் காலங்கள்' எனத் தொடர்ந்து, இறுதியாக 'நினைத்து நினைத்து பார்த்தேன் என முடிக்கும் போது நெஞ்சம் சிதறிவிடும். கொண்டாட்டம், காதல், காமம், பிரிவு என வெரைட்டியான பாடல்களால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். நா முத்துக்குமாரின் கவித்துவமான வரிகள், காதலை கொண்டாடி தீர்க்க வைத்தது. அதேபோல், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் தரமாக அமைந்திருக்கும். இப்படி காலத்துக்கும் கொண்டாடக் கூடிய ஒரு மாபெரும் படைப்பை கொடுத்த செல்வராகவனுக்கு, 7ஜி ரெயின்போ காலனி வெளியான 18வது ஆண்டில் ரசிகர்கள் நன்றி தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

  English summary
  7G Rainbow Colony is a romantic drama film directed by Selvaraghavan. Ravi Krishna and Sonia Agarwal starred in this film making it a sensational hit in Kollywood. Also, Yuvan Shankar Raja's songs are all celebrated by fans. In this case, Selvaraghavan’s Fans are celebrating 18 years of 7G Rainbow Colony
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X