»   »  பேயாக ரெஜினா மிரட்டும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’... புதிய போஸ்டர்கள்!

பேயாக ரெஜினா மிரட்டும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’... புதிய போஸ்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் செல்வராகவனின் புதிய படமான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவரது இரண்டாம் உலகம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.


அப்படத்தைத் தொடர்ந்து பின்னர் சிம்புவை வைத்து கான் படத்தை இயக்குவதாகத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் செல்வராகவன். ஆனால், அத்திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.


நெஞ்சம் மறப்பதில்லை...

அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், அட்டக்கத்தி நந்திதா, ரெஜினா நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
 யுவன் இசை...

யுவன் இசை...

கெளதம் மேனன், மதன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை. எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் யுவன் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத்தொடங்கியுள்ளது.


பேய்ப்படம்...

இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. காதல் கதைகளை இயக்குவதில் வல்லவரான செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் முதல் பேய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ரெஜினா பேயாக...

நெஞ்சம் மறப்பதில்லை எனப் பழைய படத்தின் பெயரை வைத்திருப்பதால், இது அப்படத்தின் ரீமேக் அல்ல எனப் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இப்படத்தில் ரெஜினா தான் அழகிய பேயாக நடித்திருக்கிறாராம்.


பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை என்பதில் பதில் என்ற எழுத்துக்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.


ஆகஸ்டில் ரிலீஸ்...

ஆகஸ்டில் ரிலீஸ்...

ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


English summary
Post Iraivi, S.J.Suryah is in demand as an actor too. He will be seen next in the Selvaraghavan-directed Nenjam Marappathillai, the first look was out on Monday evening and soon it started trending on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil