»   »  செல்வராகவன்- சந்தானம் இணையும் படத்தின் தலைப்பு மன்னவன் வந்தானடி!

செல்வராகவன்- சந்தானம் இணையும் படத்தின் தலைப்பு மன்னவன் வந்தானடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்துக்கு 'மன்னவன் வந்தானடி' என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Selvaraghavan - Santhanam's new movie title Mannavan Vanthanadi

இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். டிசம்பர் முதல் வாரத்தில் ஹைதரபாத்தில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கிறார்.

'மன்னவன் வந்தானடி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது.

பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - மஞ்சுளா நடித்து 1975-ல் வெளியான படத்தின் தலைப்புதான் மன்னவன் வந்தானடி.

English summary
Selvaraghavan - Santhanam's new movie has titled 'Mannavan Vanthanadi'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil