»   »  கவுதம் மேனன் இல்லாமல் இது சாத்தியமில்லை.... செல்வராகவன் உருக்கம்

கவுதம் மேனன் இல்லாமல் இது சாத்தியமில்லை.... செல்வராகவன் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை முழுவதும் கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

Selvaraghavan says thanks to Gautham Menon

நேற்று இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு மிக எளிமையாக திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவில் எளிமையாக நடைபெற்றது.

இந்தப் படத்தில் முதன்முறையாக எஸ்.சூர்யாவை, செல்வராகவன் இயக்க மற்றொரு இயக்குநரான கவுதம் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் எஸ்.சூர்யாவிற்கு ஜோடியாக 'அட்டக்கத்தி' நந்திதா மற்றும் ரெஜினா என்று 2 நாயகிகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.

இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார். இரண்டாம் உலகம் படத்திற்குப் பின்னர் செல்வராகவன்- சிம்பு கூட்டணியில் உருவான 'கான்' இடையிலே நின்று போனது குறிப்பிடத்தக்கது.

Selvaraghavan says thanks to Gautham Menon.He Wrote on Twitter "This whole thing would not have been possible without @menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!

60 words

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார்.

English summary
Selvaraghavan says thanks to Gautham Menon.He Wrote on Twitter "This whole thing would not have been possible without menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil