நானே வருவேன்...செல்வராகவன் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட்

சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படம் பற்றிய முக்கிய அசத்தல் அப்டேட் ஒன்றை செல்வராகவன் இன்று வெளியிட்டுள்ளார். இதனால் அடுத்த முக்கிய அப்டேட் பற்றிய ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பான் இந்தியன் நடிகராகி விட்டார். ஒரே சமயத்தில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் நான்காவது முறையாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு, The Extraordinary of The Fakir, The Gray man போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

முதல் பைலிங்குவல் படம்

முதல் பைலிங்குவல் படம்

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிஸியாக இருந்தாலும் முதல் பைலிங்குவல் படமாக வாத்தி படத்திலும் நடிக்க உள்ளார். தனுஷ் காலேஜ் ப்ரொஃபஷராக நடிக்க உள்ள இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் தயாராக உள்ளது. ஓடிடி, தியேட்டர் என அனைத்திலும் வரிசையாக தனுஷ் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

இறுதிக்கட்டத்தில் நானே வருவேன்

இறுதிக்கட்டத்தில் நானே வருவேன்

இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பிகில், மகாமுனி படங்களில் நடித்த இந்துஜா ரவிச்சந்தர், ஒரு தனுஷ் கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்

செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்

இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை செல்வராகவன் இன்று வெளியிட்டுள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராமில் யுவன்சங்கர் ராஜாவுடன் இருக்கும் செல்ஃபியை பகிர்ந்த செல்வராகவன், நானே வருவேன் படத்தின் ஆல்பம் வேலைகளை இப்போது தான் முடித்தோம். உங்களை சந்திக்க இனியும் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

நானே வருவேன் படத்தின் இசை பணிகள் முடிந்து விட்டதால் ரிலீஸ் எப்போ என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கி விட்டனர். விரைவில் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறன், திருச்சிற்றலம்பலம் படங்களின் வேலைகளும் இறதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் அடுத்தடுத்து தனுஷ் படங்களின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X