Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் செல்வராகவன் தான்- அசுரன் தனுஷ்
சென்னை: எனக்கு நடிப்பில் ABCD கற்றுக்கொடுத்தவரே இயக்குநர் செல்வராகவன் தான். என்னை அடுத்த கட்ட நடிகனாக உருவாக்கியதில் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனின் பங்கு அதிகம் என்று தனுஷ் கூறியுள்ளார். நடிப்பு மீது எனக்கு இருக்கும் பார்வையை தெளிவுபடுத்தியதும் அவர்களே. இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் ஆனாலும், அல்லது என் வாழ்நாள் முடிவதற்குள் நிச்சயம் நான் ஒரு முழுமையான நடிகனாக என்னை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது என்றார் தனுஷ்.
16 வயதில் சினிமாவில் முதன்முதலாக நுழைந்த போது எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற ஒரு அசுர நடிகன் யார் தெரியுமா, சாட்சாத் நம்ம தனுஷ் தான் அது.

ஒரு நேர்காணலின் போது, தனுஷ் தனது சினிமா அனுபவம் பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது அவர், அசுரன் திரைப்படம் எனது சினிமா வாழ்வில் மிக முக்கியான திரைப்படம். இப்படத்தில் நான் அந்த கதாபாத்திரத்தோடும் மற்ற கதாபாத்திரங்களோடும் மிகவும் ஒன்றி போய் நடித்த திரைப்படம், என்றார்.
நீங்கள் ஒல்லியான சிறிய உடல்வாகாக இருப்பதால் ஏதாவது பட வாய்ப்புகள் உங்களை விட்டு சென்றுள்ளதா என்று கேட்டதற்கு, அது போல இதுவரையில் எந்த ஒரு பட வாய்ப்பையும் நான் இழந்ததே இல்லை. மேலும் எனக்கு பொருத்தமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நான் அந்த படத்தை ஒப்புக்கொள்வேன், என்றார்.
எனக்கு அனைத்து விதமான படங்களிலும் நடிக்க வேண்டும் என எனக்குள் இருந்த ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாக நான் நினைக்கிறேன், என்றார்.

சினிமா பற்றியும், நடிப்பு பற்றி மட்டுமில்லாமல் என்னால் என்ன முடியும் என்பதை நானே உணர்ந்து கொள்ள எனக்கு உறுதுணையாய் இருந்த சிலரை நான் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர்களில் இயக்குநர் பாலுமகேந்திரா, செல்வராகவன், வெற்றிமாறன் இவர்கள் நிச்சயம் அடங்குவர்.
எனக்கு நடிப்பில் ABCD கற்றுக்கொடுத்ததே அவர்கள்தான். என்னை அடுத்த கட்ட நடிகனாக உருவாக்கியதில் இவர்கள் பங்கு அதிகம். மேலும் நடிப்பு மீது எனக்கு இருக்கும் பார்வையை தெளிவு படுத்தியதும் அவர்களே.
ஹீரோவுக்கான
அத்தனை
தகுதியும்
உனக்கு
இருக்கு-துருவ்வை
பாராட்டிய
ப்ரித்விராஜ்
நடிப்பதில் மிகவும் சிரமமானது நகைச்சுவை தான். அந்த ஒரு வித்தியாசத்தையும் எனக்கு தேவதையை கண்டேன் திரைப்படம் மூலம் கொடுத்தது பூபதி பாண்டியன் தான் என்றார்.

இந்த படம் வெற்றி பெறும் இந்த படம் வெற்றி பெறாது என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால் எதைச் செய்தாலும் அதை சிறப்பாகவும் முழுமையாகவும் செய்யவேண்டும் என்பதை எனக்கு கற்று கொடுத்தவர் எனது தந்தை கஸ்துரிராஜா தான் என்றார். பிடிக்குதோ பிடிக்கலையோ, கொடுத்த வேலையை முழுக்க முழுக்க அதை முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்றும் அடிக்கடி சொல்வர் என்றார் தனுஷ்.
இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் ஆனாலும், அல்லது என் வாழ்நாள் முடிவதற்குள் நிச்சயம் நான் ஒரு முழுமையான நடிகனாக என்னை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது என்றார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் பார்த்த தனுஷிற்கும் அசுரன் தனுஷிற்கும் இடையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என எத்தனை பரிமாணங்கள் என்று பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது.
ஒல்லியாக இருக்கும் பல இளைஞர்களுக்கு தனுஷ் ஒரு பெரிய உத்வேகம். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, திறமை, விடாமுயற்சி, ஈடுபாடு இவை அனைத்தும் தான் காரணம். அவர் மேலும் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.