பீஸ்ட் படத்தில் அரசியல்வாதியாக என்ட்ரியாகும் செல்வராகவன்... ஆரம்பமே அமர்க்களமா இருக்கே

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படம் விஜய்யின் 65 வது படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஏப்ரல் மாதம் பூஜையுடன் துவக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவில் துவங்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையிலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும், மீண்டும் சென்னையிலும் ஷுட்டிங் நடத்தப்பட்டது. இந்த படத்தின் 80 சதவீதம் ஷுட்டிங் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஜார்ஜியா செல்லும் படக்குழு

ஜார்ஜியா செல்லும் படக்குழு

இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் உள்ளிட்ட முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு விரைவில் மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் க்ளைமாக்ஸ் காட்சிகளை ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே கூறி வந்தது. ஆனால் ரஷ்யா செல்வார்களா, மாட்டார்களா என இதுவரை தெரியவில்லை.

வைரலான சண்டை காட்சிகள்

வைரலான சண்டை காட்சிகள்

விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் உடனான ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன. அதற்கு பிறகு படம் பற்றி அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன், தங்கம் கடத்தலை மையமாகக் கொண்டது தான் பீஸ்ட் படத்தின் கதை என்றார். இதற்கு ஏற்றாற் போல் சென்னையில் மால் போன்ற செட் அமைக்கப்பட்டு, சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

வில்லனாக அறிமுகமாகும் செல்வராகவன்

வில்லனாக அறிமுகமாகும் செல்வராகவன்

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் மற்றும் ஷைன் சாகோ ஆகியோர் நடிக்கிறார்கள். செல்வராகவன் முதல் முறையாக நடிகராக இந்த படத்தின் மூலம் அவதாரம் எடுத்துள்ளார். சாணி காயிதம் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தாலும், பீஸ்ட் படத்தில் முதல் முறையாக வில்லன் ரோலில் நடிக்கிறார். இதனால் டைரக்டர் செல்வராகவனை வில்லனாக பார்க்க பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அரசியல்வாதியாக நடிக்கிறாரா

அரசியல்வாதியாக நடிக்கிறாரா

லேட்டஸ்ட் தகவலின்படி, பீஸ்ட் படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் செல்வராகவன், அரசியல்வாதி ரோலில் நடிக்கிறாராம். செல்வராகவன் வரும் காட்சிகள் தான் வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருகின்றனவாம். அவர் வரும் காட்சிகளை எந்த க்ளூவும் கொடுக்காமல் செம சஸ்பென்சாக வைத்துள்ளார்களாம்.

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

பீஸ்ட் படத்தின் 80 சதவீதம் ஷுட்டிங் முடிந்து விட்டாலும் மீதமுள்ள வேலைகள், போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆகியவற்றை கவனிக்க வேண்டி உள்ளதால் 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் பொங்கல் ரேசிலோ அல்லது வலிமையுடன் மோதலோ இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு தானாம். விஜய் - அஜித் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்தால் மாஸாக, பரபரப்பாக இருக்கலாம். ஆனால் அது இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும் என்பதால் பீஸ்ட் படத்தை பொறுமையாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

பொங்கல் ரேஸில் இல்லையா

பொங்கல் ரேஸில் இல்லையா

அது மட்டுமின்றி பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கே இன்னும் முடிக்கப்படாததால், இன்னும் பல வேலைகள் பாக்கி உள்ளதாம். அவற்றிற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் தான் 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X