Don't Miss!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- News
"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
துணை என்பது கானல் நீர்..செல்வராகவனின் பதிவுக்கான பதிலா இது..என்ன சொல்கிறார் கீதாஞ்சலி!
சென்னை : முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன் இருதினங்களுக்கு முன், துணை என்பது கானல் நீர் என்று ஒரு பதிவினை ஷேர் செய்திருந்தார். இது இணையத்தில் பேசு பொருளான நிலையில் அவரது மனைவியின் இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கோட்டை, புதுக்கோட்டை போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற இடத்தை பிடித்துள்ளார் செல்வராகவன்.
இயக்குநராக இருந்த செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடித்து நடிகராக மாறினார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடித்து நடிப்பில் மிரட்டினார். இந்த படம் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.
மறுபடியும்
டைவர்ஸா?
இயக்குநர்
செல்வராகவன்
போட்ட
அந்த
ட்வீட்டை
பார்த்து
பதறிப்போன
ரசிகர்கள்!

பகாசூரன் படத்தில்
தற்போது செல்வராகவன் இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் பகாசூரன் என்ற படத்தில் லீட்ரோலில் நடித்து வருகிறார். ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.

தத்துவம் சொல்லும் செல்வராகவன்
இணையத்தில் அவ்வப்போது தத்துவங்களை பகிர்வதை செல்வராகவன் வாடிக்கையாக வைத்து இருக்கிறார். கதையானாலும் சரி, தத்துவமானாலும் சரி அதில் ஓர் இனம் புதிய புதுமையும், அர்த்தமும் ஒளிந்து இருக்கும், என்பதால், இவரின் தத்துவத்தை படிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் ட்விட்டர் பக்கத்தில் இவரை பின் தொடர்ந்து வருகின்றன.

துணை என்பது கானல் நீர்
இந்நிலையில், செல்வராகவன் இருதினங்களுக்கு முன்பு, தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என பதிவிட்டு இருந்தார். இந்த ஒற்றைப்பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. செல்வராகன் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவினது.

அவருக்கான பதிலா இது
இந்நிலையில், செல்வராகவனின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில், செவ்வராகவன் போட்டோவை போடாமல் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில், 2022ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை....இந்த ஆண்டு வேடிக்கையுடன் அற்புதமாக கழிகிறது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் செல்வராகவன் இல்லாததால் பலரும்...என்ன மேடம் அவரின் பதிவுக்கு, பதில் இதுவா என வேடிக்கையாக கேட்டு வருகின்றனர்.

இருவரும் பிரிந்தனர்
இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன், 2011ம் ஆண்டு கீதாஞ்சலினை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.