»   »  10 வருடங்களுக்குப்பின் செல்வராகவனுடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா.. ரசிகர்கள் உற்சாகம்

10 வருடங்களுக்குப்பின் செல்வராகவனுடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா.. ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மூலம் 10 வருடங்கள் கழித்து செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்', ‘7ஜி ரெயின்போ காலனி', ‘புதுப்பேட்டை' படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Selvaraghavan - Yuvan Shankar Raja Reunite for Nenjam Marappathillai

இருவரின் கூட்டணியில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 'புதுப்பேட்டை' படத்திற்குப் பின் செல்வராகவன் -யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உடைந்தது.

யுவனுக்குப் பின் ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜூடன் கூட்டணி அமைத்த செல்வராகவன் தற்போது மீண்டும் யுவனுடன் இணைந்திருக்கிறார்.

தற்போது கவுதம் மேனன் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நந்திதா, ரெஜினா நடித்து வருகிறார்கள்.

முன்னதாக இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு, யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் 'விஜய் 60', 'கபாலி' படங்களில் பிஸியாக இருப்பதால் செல்வராகவன் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 'கான்' படத்தின் மூலம் இந்தக் கூட்டணி இணைந்து அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
After 10 years Selvaraghavan - Yuvan Shankar Raja Reunite for Nenjam Marappathillai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil