ஆஹா...தரமான சம்பவமா இருக்குமே... தல 62 டைரக்டர் இவர் தானா ?
சென்னை : கடந்த 2 ஆண்டுகளாக வலிமை படத்தின் வேலைகள் முடியாமல் போவதாலோ என்னவோ, இப்போதே அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் அஜித். 2019 ல் வெளியான நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் படங்கள் எதுவும் வெளி வராமல் உள்ளது.
தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்கும் படப்பிடிப்பு 5 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. அஜித் நடிக்கும் க்ளைமாக்ஸ் பைக் ரேஸ் சேஷிங் சீன் தான் ரஷ்யாவில் எடுக்கப்பட உள்ளது.
இடை விடாமல் நடத்தப்படும் இந்த இறுதிக்கட்ட ஷுட்டிங்குடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் முழு வீச்சில் நடத்தப்பட உள்ளது.

விரைவில் தல 61
60 வது படமான வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக தல 61 படத்திலும் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித். போனி கபூர், அஜித் இடையோன மூன்றாவது கூட்டணி இந்த படத்துடன் முடிவடைகிறது. பெயரிடப்படாத இந்த படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

புதிய கூட்டணியில் தல 62
இதைத் தொடர்ந்து தல 62 படத்தை போனி கபூருக்கு பதில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க போவது உறுதியாகி உள்ளது.

இவர் தான் டைரக்டரா
லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின் படி, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தல 62 படத்தை டைரக்டர் சுதா கொங்கரா தான் இயக்க போகிறாராம். மாதவன் நடித்த இறுதிச்சுற்று, சூர்யா நடித்த சூரரைப் போற்று போன்ற சர்வதேச கவனத்தை ஈர்த்த படங்களை தந்த சுதா, அடுத்ததாக அஜித்தை இயக்க போகிறாராம். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறாராம்.

இவர்களும் இயக்க வாய்ப்பா
அதே சமயம் அஜித் நடித்த பில்லா, பில்லா 2 படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் அல்லது சிறுத்தை சிவாவும் தல 62 படத்தை இயக்குவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டைரக்டர் எந்த சமயத்திலும் மாறலாம் என்றாலும் அஜித், சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணையும் படம் 2022 ல் துவங்கப்பட உள்ளது உறுதியாகி விட்டதாம்.

அடுத்த அறிவிப்பு காத்திருக்கு
விரைவில் தல 61, தல 62 படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் வலிமை செகண்ட் சிங்கிள் பாடலை யுவன்சங்கர் ராஜா தயார் செய்து விட்டதாக ஏற்கனவே டைரக்டர் வெங்கட் பிரபு கூறி உள்ளதால் அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தீபாவளி ரிலீசா
ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்து வரும் வலிமை படத்தை பண்டிகை நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











