twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

    By Shankar
    |

    Selvaraj
    சென்னை: மூத்த நடிகர்களுள் ஒருவரான இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

    எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் என சாதனைக் கலைஞர்களுடன் நடிக்க ஆரம்பித்தவர் இடிச்சபுளி செல்வராஜ். எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனில் நடித்தவர், பின்னர் அவரது பெரும் வெற்றிப் படங்களான இதயக்கனி,' உலகம் சுற்றும் வாலிபன்' ஆகியவற்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். சிவாஜியுடன் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இன்றைய ஜாம்பவான்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் வேலைக்காரன், முத்து, படையப்பா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

    கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்று காலை 7 மணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

    அவருடைய உடல் சென்னை நந்தனம் சத்யமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்குப்பின், நேற்று மாலை 6 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில், அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

    மரணம் அடைந்த இடிச்சபுளி செல்வராஜ், நடிகர் பாண்டுவின் உடன் பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் இருக்கிறார்கள்.

    English summary
    Veteran actor Idichapuli Selvaraj passed away on Monday after severe breathing trouble. He was 72. His body cremated on the same day evening after last respects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X