கோடிகள்ல சம்பளம் வாங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையே... ஹீரோயின்களை விளாசிய பிரபல நடிகர்!

By

ஐதராபாத்: கோடிகளில் சம்பளம் வாங்கிவிட்டு கொஞ்சம் கூட உதவாமல் சில ஹீரோயின்கள் இருப்பதாக நடிகர் ஒருவர் விளாசியுள்ளார்.

Recommended Video

Allu Arjun Huge Contribution | FEFSI Workers

தமிழ், ஶ்ரீகாந்த் நடித்த ஜூட் படம் தமிழில் நடிகராக அறிமுகமானவர், தெலுங்கு நடிகர் பிர்ம்மாஜி.

சிம்பு, ஜோதிகா நடித்த சரவணா, விக்ரமன் இயக்கிய சென்னை காதல், ராதாமோகன் இயக்கத்தில் அல்லு சிரிஸ் நடித்த கெளரவம், பிரசாந்த் நடித்த சாகசம் ஆகிய படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

தெலுங்கில் ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

நடிகர்கள் உதவி

நடிகர்கள் உதவி

தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும்படி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்று ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி உட்பட ஏராளமான நடிகர்கள் உதவினர். பல லட்சங்களை வழங்கினர்.

பல கோடிகள்

பல கோடிகள்

பின்னர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் சிலர் உதவினர். தெலுங்கு சினிமா நடிகர்கள் தாரளமாக போட்டிப் போட்டுக்கொண்டு கோடிகளை அறிவித்தனர். நடிகர்கள், ராம்சரண், பவன்கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் உட்பட பலர் பல கோடிகளை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் பிரம்மாஜி நடிகைகளை கடுமையாகச் சாடியுள்ளார்.

மும்பை நடிகைகள்

மும்பை நடிகைகள்

அவர் கூறும்போது, தென்னிந்திய சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் மும்பை நடிகைகள், இதற்கு கொஞ்சம் கூட உதவாதது ஆச்சரியமாக இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் இதற்கு உதவவில்லை. நடிகை லாவண்யா திரிபாதி மட்டுமே முன்வந்து உதவி இருக்கிறார். மற்றவர்கள் என்ன ஆனார்கள்? எவ்வளவு தொகை என்பது முக்கியமல்ல, லட்சங்களை கொடுக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

குணசித்திர நடிகர்கள்

குணசித்திர நடிகர்கள்

சில ஆயிரம் ரூபாய்களையாவது கொடுத்து உதவ வேண்டாமா? என்று அவர் கேட்டுள்ளார். இதுபோன்ற நேரத்தில்தான் எல்லோரும் உதவவேண்டும். அதிக சம்பளம் வாங்குபவர்கள் உதவுவதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? அதோடு அதிக சம்பளம் வாங்கும் சில குணசித்திர நடிகர்கள் கூட உதவாமல் அமைதி காப்பது வியப்பைத் தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X