»   »  மூத்த நடிகை கே ஆர் இந்திரா மரணம்.. மன்னன், பணக்காரன் படங்களில் நடித்தவர்!

மூத்த நடிகை கே ஆர் இந்திரா மரணம்.. மன்னன், பணக்காரன் படங்களில் நடித்தவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கேஆர் இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65.

கொஞ்சும் குமாரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேஆர் இந்திரா. இதே படத்தில்தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்.

Senior actress K R Indira passes away

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக படத்தில் நடித்தார். ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எம்ஆர் ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா, கந்தன் கருணை, சிந்து பைரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த மன்னன், பணக்காரன் உள்பட 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கடைசி படம் கிரிவலம்.

இவருடைய தந்தை கே. எஸ். ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர்.

நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர். இந்திரா வீட்டிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடைய இறுதிசடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

முகவரி :பழைய எண் 6, புதிய எண் 8ஏ, சொக்கலிங்கம் நகர், வெள்ளாள தேனாம்பேட்டை. அலைபேசி: 9380012226

English summary
Senior actress K R Indira was passed away today at her residence. She was 65.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil