»   »  நாளை 11 படங்கள் ரிலீஸ்.. ஒரு வாரம் ஓடுனா போதும்னு நினைச்சிட்டாங்களோ..?

நாளை 11 படங்கள் ரிலீஸ்.. ஒரு வாரம் ஓடுனா போதும்னு நினைச்சிட்டாங்களோ..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய படங்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதிலும், அவற்றிற்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நிலவும் நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாகவிருக்கின்றன.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் நாட்களில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.

சமீபகாலமாக, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் ஏமாற்றி வருவது கண்கூடு. இவைகளுக்கு மத்தியில் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களும் வெற்றி பெறுகின்றன.

சினிமாவின் அடுத்த கட்டம் :

சினிமாவின் அடுத்த கட்டம் :

சினிமாவை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கு இம்மாதிரியான நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களின் வெற்றி அவசியமானதாகும். சமீபத்தில் வெளிவந்த 'குரங்கு பொம்மை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுத பூஜை படங்கள் :

ஆயுத பூஜை படங்கள் :

ஆயுத பூஜையை ஒட்டி மகேஷ்பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படமான 'ஸ்பைடர்', விஜய் சேதுபதியின் 'கருப்பன்', நயந்தாரா நடிக்கும் 'அறம்' ஆகிய படங்கள் அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கின்றன.

இந்த வார சினிமா :

இந்த வார சினிமா :

ரசிகர்கள் எதிர்பார்த்த 'மகளிர் மட்டும்', 'துப்பறிவாளன்' படங்கள் கடந்த வாரமே வெளியான நிலையில் இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகப்போவதில்லை. ஆனாலும் 11 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

11 படங்கள் :

11 படங்கள் :

ஆயுத பூஜைப் படங்கள் வெளிவருவதற்குள் ஒரு வாரமாவது ஓட்டிவிட வேண்டும் என இந்த வாரம் 11 படங்கள் களத்தில் குதித்திருக்கின்றன. நாளை ராணா நடிக்கும் 'நானே ராஜு நானே மந்திரி' தெலுங்கு படத்தின் டப் ‘நான் ஆணையிட்டால்' வெளிவருகிறது.

ஆயிரத்தில் இருவர் :

ஆயிரத்தில் இருவர் :

நாசர், அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்', சரண் இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்', இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி', ‘களவுத் தொழிற்சாலை' ஆகிய படங்கள் நாளை வெளியாக இருக்கின்றன.

ஓவியா படம் :

ஓவியா படம் :

கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்', ‘பயமா இருக்கு', ‘நெறி', ‘காக்கா', ‘தெருநாய்கள்', ஓவியா மலையாளத்தில் நடித்து தமிழில் டப் செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்' ஆகிய 11 படங்கள் வெளிவரவிருக்கின்றன. இவற்றில் எந்தெந்தப் படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Small budget films with good storytelling are also successful. This week 11 films are releasing on screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil