»   »  செப்டம்பர் மாதமா (தமிழ்த்) திரைப்படங்களின் மாதமா?

செப்டம்பர் மாதமா (தமிழ்த்) திரைப்படங்களின் மாதமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் சினிமாத் துறையினருக்கு மோசமான வருடமாக அமைந்து விட்டது என்று ஒரு பக்கம் புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒவ்வொரு வெள்ளியும் குறைந்தது 3 முதல் 5 படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன, இவற்றில் பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் ஓரளவு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே ஒரு வாரம் தியேட்டர்களில் தாக்குப்பிடித்து நிற்கின்றன.

மற்ற படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சென்று முடங்கிவிடுகின்றன, இது எதையும் பொருட்படுத்தாமல் புதிய படங்களை வெளியிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றனர் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள்.

அதிலும் இந்த செப்டம்பர் மாதம் சுமார் 20 க்கும் அதிகமான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன, அதன்படி பார்த்தால் ஒவ்வொரு வாரமும் சுமார் 5 படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்தப் படங்களில் 1 அல்லது 2 படங்கள் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்கும் என்று தெரிந்தும் கூட எந்த நம்பிக்கையில் இவ்வளவு படங்களையும் வெளியிடுகின்றனர் என்று தெரியவில்லை.

நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால் வெளியாகும் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

விஷால் - அசோக் செல்வன்

விஷால் - அசோக் செல்வன்

செப்டம்பர் 4 ம் தேதி விஷாலின் பாயும் புலியுடன் மோதுகிறார் தெகிடி நாயகன் அசோக் செல்வன், அசோக் செல்வன் - பிந்து மாதவி நடித்திருக்கும் சவாலே சமாளி திரைப்படம் விஷாலின் பாயும் புலியுடன் வெளியாகிறது. பாயும் புலியின் வெளியீடு சந்தேகம் என்றாலும் கண்டிப்பாக கொண்டுவந்து விடுவோம் என்று படக்குழுவினர் நம்பிக்கை கொடுத்திருப்பதால், விளம்பரங்களில் களை கட்டிக் கொண்டு இருக்கிறது பாயும் புலி.

சிறிய படங்கள்

சிறிய படங்கள்

பாயும் புலி, சவாலே சமாளி படங்களுடன் சிறிய பட்ஜெட் படங்களான போக்கிரி மன்னன், 9 திருடர்கள், பானு ஆகிய படங்கள் வெளியாகின்றன. ஆக மொத்தம் 5 படங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக இருக்கின்றன.

ஆர்யா - பா.விஜய் - பிரேம்ஜி அமரன்

ஆர்யா - பா.விஜய் - பிரேம்ஜி அமரன்

செப்டம்பர் 11 ம் தேதி செப்டம்பர் மாதத்தின் 2 வது வாரத்தில் ஆர்யா - கிருஷ்ணா நடித்திருக்கும் யட்சன், பா.விஜயின் ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிரேம்ஜி அமரனின் மாங்கா ஆகிய படங்கள் வெளியாக விருக்கின்றன.

2 வது வாரத்திலும் 5 படங்கள்

2 வது வாரத்திலும் 5 படங்கள்

மேலே சொன்ன படங்களைத் தவிர சிக்கிக்கு சிக்கிக்கிச்சு, ஜவ்வு மிட்டாய் ஆகிய சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாவதால் 2 வது வாரத்திலும் 5 படங்கள் வெளியாகின்றன.

கவுண்டமணி - சிவகார்த்திகேயன்

கவுண்டமணி - சிவகார்த்திகேயன்

செப்டம்பர் 3 வது வாரத்தில் கடும் போட்டியை அளிக்கக் கூடிய நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. நகைச்சுவை மன்னன் என்று போற்றப்படும் நடிகர் கவுண்டமணியின் 49 ஓ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஆகிய 2 படங்களும் செப்டம்பர் 17 ம் தேதி மோதுகின்றன. இந்த 2 படங்களுமே நகைச்சுவையை பின்னணியாக் கொண்ட படங்கள் என்பதால் மோதல் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா - ஜி.வி.பிரகாஷ் குமார்

நயன்தாரா - ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா தன் தோள்களில் தூக்கி சுமந்த மாயா வை செப்டம்பர் 17 ல் இறக்கி வைக்கிறார் அதே நாளில் டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் களத்தில் குதிக்கிறது.

3 வாரத்திலும் குறையாத படங்கள்

3 வாரத்திலும் குறையாத படங்கள்

மேலே சொன்ன படங்களுடன் பேய்ப் படமாக உருவாகி வரும் உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படமும் செப்டம்பர் 17 ம் தேதியன்று வெளியாகிறது. ஆக 3 வாரத்திலும் 5 படங்கள் வெளியாகவிருக்கின்றன.

கடைசி வாரத்தில்

கடைசி வாரத்தில்

செப்டம்பர் கடைசி வாரத்தில் குற்றம் கடிதல் திரைப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அஞ்சுக்கு ஒண்ணு, நாளை முதல் குடிக்க மாட்டேன், நானாக நானில்லை போன்ற படங்களும் செப்டம்பர் மாதமே வெளியாக இருக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது இந்த வார்த்தை தான் எனக்கு சொல்லத் தோணுது சபாஷ் சரியான போட்டி...

English summary
September Month: More than 20 Movies Released in Tamil Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil