»   »  3 நாட்களில் ரூ 3 கோடி.. இன்று நேற்று நாளைக்கு பார்ட் டூ தயாராகிறது!

3 நாட்களில் ரூ 3 கோடி.. இன்று நேற்று நாளைக்கு பார்ட் டூ தயாராகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இன்று நேற்று நாளை படத்துக்கு இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இப்போதே தயாராகிவிட்டார் தயாரிப்பாளர் சிவி குமார்.

சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'.


3 நாளில் 3 கோடி

3 நாளில் 3 கோடி

படம் வெளியான நாள் முதலே வசுல் வேட்டையை தொடங்கிய இப்படம், இதுவரை 3 நாட்களில் 3 கோடி ருபாயை வசுல் செய்து சாதனை புரிந்துள்ளது.


தியேட்டர்கள் அதிகரிப்பு

தியேட்டர்கள் அதிகரிப்பு

அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி நிறுவனம் சார்பாக முதலில் 150 திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பால் இன்னும் பல திரையரங்குகளில் கூடுதலாக வெளியாகியுள்ளது.


நல்ல வசூல்

நல்ல வசூல்

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களில், "இன்று நேற்று நாளை" படம் சிறந்த வசூல் துவக்கத்தை தந்த படமாக அமைந்துள்ளது. குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படத்தை மிகவும் ரசித்து பார்க்கின்றனர்.


நன்றி

நன்றி

"இன்று நேற்று நாளை படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்வதாக" தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.


பார்ட் டூ

பார்ட் டூ

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் படபிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டது. இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னனி நடிகர் நடிக்கவுள்ளார். மேலும் விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.


English summary
The producers of Indru Netru Naalai is planning for a sequel to recently released Indru Netru Naalai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil