»   »  கபாலி படத்துக்கு இரண்டாம் பாகம் வருமா?- கலைப்புலி தாணு பதில்

கபாலி படத்துக்கு இரண்டாம் பாகம் வருமா?- கலைப்புலி தாணு பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் அது என் பாக்கியம். அது ரஜினி சார் கையில்தான் உள்ளது என்று கலைப்புலி தாணு கூறினார்.

தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வசூல் சாதனைப் படைத்து வருகிறது.

இந்தப் படத்தின் வசூல் இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காதது என்றும், இதனை இன்னொரு ரஜினி படத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

Sequel for Kabali?

இந்த நிலையில் கபாலி படத்தின் முடிவு அதன் இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியைப் டாபோல அமைந்திருப்பதால் அதன இரண்டாம் பாகத்துக்கு இயக்குநர் ரஞ்சித் தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் நாம் கேட்டபோது, "கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் அது என் பாக்கியம். அது ரஜினி சார் கையில்தான் உள்ளது. அதுபற்றி அவர்தான் கூற வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் தயாராகவே உள்ளேன்," என்றார்.

English summary
Kalaipuli Thaanu said that he is ready to produce Kabali sequel at any time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos