மர்மதேசம் நடிகர் தற்கொலையில் மர்மம்... உடலை வாங்க மறுத்த மனைவி?... தந்தை பரபரப்பு பேட்டி...

சென்னை: பிரபல தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர் லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது சின்ன திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லோகேஷின் தற்கொலை குறித்து அவரது தந்தை பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

மர்ம தேசம் ராசு

மர்ம தேசம் ராசு

தொன்னூறுகளில் தமிழில் மிக பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று மர்ம தேசம். இதில் 'விடாது கருப்பு' என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் லோகேஷ். ராசு என்ற கேரக்டரில் சிறுவனாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். மேலும் மற்றொரு குழந்தைகள் சீரியலான ஜீ பூம்பாவிலும் லோகேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் தமிழில் வெளியான '6 அத்தியாயங்கள்' என்ற ஆந்தாலஜியில் ஒரு எபிசோடை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் நடிகர் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது சின்ன திரையிலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷின் தந்தை பேட்டி

லோகேஷின் தந்தை பேட்டி

சீரியல் நடிகர் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது தந்தை ராஜேந்திரன் பேட்டி கொடுத்துள்ளார்.: அதில், "குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்திற்காக மனைவிக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், அதிக மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது தனக்கு தெரியவந்துள்ளது. 2011ல் அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் மாடம்பாக்கத்தில் லோகேஷ் வசித்து வந்ததாகக்" ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சந்திப்பது கிடையாது

சந்திப்பது கிடையாது

தொடர்ந்து பேசிய அவர், "நான் வில்லிவாக்கத்தில் வசித்து வரும் நிலையில் திருமணத்திற்கு பின் லோகேஷ் என்னுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதுவரை இருமுறை மட்டுமே லோகேஷ்தன்னை சந்தித்துள்ளார். இறுதியாக கடந்த சனிக்கிழமை (செப் 01) என்னை சந்திக்க வந்த லோகேஷ், பணம் வேண்டும் என கேட்டுப் பெற்றுச் சென்றார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது பற்றி தனக்கு தெரியாது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சனை குறித்து எனக்கு தெரியாது. விவாகரத்து குறித்து நோட்டீஸ் வந்த பிறகே கடந்த 6 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றி எனக்கு தெரியும்" எனக் கூறியுள்ளார்.

லோகேஷின் தந்தை உருக்கம்

லோகேஷின் தந்தை உருக்கம்

மேலும், "கடந்த திங்கட்கிழமை போலீசார் தகவல் கொடுத்த பிறகே லோகேஷ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியும். லோகேஷ் சிறந்த நடிகர், மர்ம தேசம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார். முன்னணி நடிகர்களுடன் 150க்கும் மேற்பட்ட தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஆர் ராதாவின் தம்பி மகன் நான். ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன்" என மிக உருக்கமாக கூறியுள்ளார்.

மனைவி உடலை வாங்கவில்லை

மனைவி உடலை வாங்கவில்லை

தொடர்ந்து பேசியுள்ள லோகேஷின் தந்தை ராஜேந்திரன், "சிகிச்சை பலனின்றி நேற்று (செப் 04) லோகேஷ் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை பெற்றுச் செல்ல மருத்துவமனைக்கு வந்துள்ளேன். உடலை கொடுத்த பின் வில்லிவாக்கம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல இருக்கிறேன். லோகேஷின் மனைவி அனிஷா நேற்று பார்வையாளர் போல் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டார். மேலும், உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்றும் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்," என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லோகேஷின் தந்தை கூறியதன் பின்னணியிலும் போலீஸார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X