இரு வீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம்.. புது குண்டை போட்ட முனீஷ்ராஜா.. சம்மதிப்பாரா ராஜ்கிரண்?

சென்னை: தனது வளர்ப்பு மகள் திருமணம் பற்றி நடிகர் ராஜ்கிரண் விளக்கம் கொடுத்த நிலையில், தங்களது திருமணம் பற்றி முனீஷ்ராஜா மற்றும் பிரியா விளக்கம் கொடுத்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் சொந்த மகளாக வளர்த்து வந்த ஜீனத் பிரியா தனது விருப்பத்திற்கு மாறாக சீரியல் நடிகருடன் சென்ற நிலையில், அவள் என் மகளே இல்லை வளர்ப்பு மகள் என்கிற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.

இந்நிலையில், ஜீனத் பிரியா எனும் பிரியா நாச்சியார் மற்றும் சீரியல் நடிகர் முனீஷ்ராஜா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள விளக்க வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

ராஜ்கிரண் ஆவேசம்

ராஜ்கிரண் ஆவேசம்

தனது வளர்ப்பு மகளை சீரியல் நடிகர் முனீஷ்ராஜா ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் தனது பேச்சைக் கேட்காத பிரியா இனிமேல் தனக்கு உறவே இல்லை என்றும் நடிகர் ராஜ்கிரண் ஆவேசமாக மிக நீண்ட விளக்கத்தை கொடுத்து தனது ஒட்டுமொத்த கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும், முனிஷ்ராஜா நல்லவனே கிடையாது என்றும் மகாமட்டமானவன், பணத்துக்காகத் தான் இந்த மோசடி திருமணம் என குமுறியிருக்கிறார்.

முனீஷ்ராஜா - பிரியா வீடியோ

முனீஷ்ராஜா - பிரியா வீடியோ

இந்நிலையில், தங்கள் திருமணம் பற்றி பரவும் தகவலில் உண்மை இல்லை என சீரியல் நடிகர் முனீஷ்ராஜா மற்றும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா விளக்கம் அளித்துள்ள வீடியோவும் வெளியாகி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளன. இதில், யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்றே தெரியவில்லை என்றும் பிரியாவின் காதலுக்கு ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்காதது தான் தப்பு என்றும் இத்தனை நாள் வளர்த்தவருக்கு தெரியாதா எப்படி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் பல இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நடப்பது தான் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ரெஜிஸ்டர் மேரேஜ்

ரெஜிஸ்டர் மேரேஜ்

முனீஷ்ராஜா மற்றும் பிரியா நாச்சியார் இருவரும் தங்களது காதலை சொன்ன நிலையில், நடிகர் ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பெரியோர்களின் சம்மதத்துடன் விரைவில் அனைவருக்கும் பத்திரிகை வைத்து கோலாகலமாக எங்களது திருமணம் நடைபெறும் என அந்த வீடியோவில் முனீஷ்ராஜா கூறியுள்ளார்.

இரு விட்டார் சம்மதத்துடன்

இரு விட்டார் சம்மதத்துடன்

தங்களை பற்றி தேவையில்லாத வதந்திகள் வெளியாகி உள்ளன என்றும், விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திரையுலக நண்பர்கள், சொந்தங்கள் புடை சூழ எங்களது திருமணம் நடைபெறும் என்றும் இப்போது எங்களுக்கு ஆதரவு அளிப்பது போலவே எப்போதும் ஆதரவு அளியுங்கள் என்றும் அந்த வீடியோவில் முனீஷ்ராஜா பேசி உள்ளார்.

சம்மதிப்பாரா ராஜ்கிரண்

சம்மதிப்பாரா ராஜ்கிரண்

தனது பேச்சை மீறி சீரியல் நடிகருடன் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்ட பிரியா இனி தனது மகளே இல்லை என்றும், இருவரும் தனது பெயரை எங்கேயும் பயன்படுத்தக் கூடாது, மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என சொல்லி இருக்கும் நடிகர் ராஜ்கிரண் இருவரையும் ஏற்றுக் கொண்டு முனீஷ்ராஜா சொல்வது போல திருமணத்துக்கு சம்மதிப்பாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X