Just In
- 3 hrs ago
கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
- 3 hrs ago
எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!
- 3 hrs ago
அரசியலில் ராதிகா.. இனிமே சித்தி இவங்கதான்! இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 3 hrs ago
சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்.. பொகரு பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட துருவா சர்ஜா!
Don't Miss!
- News
சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை... வதந்திகளை நம்ப வேண்டாம் - முத்தரசன் கோரிக்கை
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Finance
கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் கணவர் தற்கொலை.. சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்தார் நடிகை நந்தினி மைனா!
சென்னை: சீரியல் நடிகை நந்தினி கிசுகிசுக்கப்பட்டு வந்த சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக அறிமுகமானார். அந்த சீரியலில் துருதுருவென துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார்.
இதனால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டார். தொடர்ந்து வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார் நந்தினி. ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்த நந்தினி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.

முதல் கணவர் தற்கொலை
சீரியலில் பிஸியாக இருந்த நந்தினி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இருந்தார். தனது பெற்றோருடன் நந்தினி வசித்து வந்த நேரத்தில் நந்தினியின் முதல் கணவரான கார்த்திகேயன், லாட்ஜ் ஒன்றில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கு விசாரணை
தனது மரணத்திற்கு நந்தினியின் அப்பாதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மீண்டும் நடிப்பு
கணவர் இறந்த துக்கத்தால் நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்தார் நந்தினி. பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் தலைகாட்ட தொடங்கிய நந்தினி, நிகழ்ச்சி தொகுப்பாளினி, போட்டி நடுவர் என பல முகங்களை கொண்டிருந்தார்.

சீரியல் நடிகர்
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார் நந்தினி. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவரை மைனா நந்தினி திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது.

திருமணம்
இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
|
வாழ்த்து
இருவரது திருமணமும் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியின் இரண்டாவது திருமண போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.