நடிகருடன் இரண்டாவது திருமணம்.. முடிந்தது நிச்சயதார்த்தம்.. புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை!
நடிகை மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஷ்வரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: பிரபல மைனா நந்தினி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா எனும் கதாபாத்திரத்தில் காமெடியாக நடித்து பிரபலமானவர் நந்தினி. அதுமுதல் அவர் மைனா நந்தினி என அறியப்படுகிறார்.

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தான் மைனா நந்தினி நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, சின்ன தம்பி உள்ளிட்ட சீரியல்களில் அவர் நடித்தார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் சிறிய ரோலில் நந்தினி நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி நாடகத்தில் அவர் நடித்து வருகிறார்.
மைனா நந்தினி ஏற்கனவே திருமணமானவர். சில வருடங்களுக்கு முன்னர் ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்தது. ஒருநாள் திடீரென கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார்.
தங்களுடைய மகனின் தற்கொலைக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என கார்த்திக்கின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். கார்த்திக்கும் தனது தற்கொலைக்கு காரணம் மைனாவின் தந்தை தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல நடிகரும் நடன இயக்குனருமான யோகேஷ்வரனுடன், மைனா நந்தினிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவும் காதல் திருமணம் தான். மைனா நந்தினி, யோகேஷ்வரன் ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











