கோபிநாத் பேச்சு முட்டாள் தனமா இருக்கு.. திடீரென பொங்கிய சீரியல் நடிகை.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் VS தெரு நாய்களுக்கு நகரத்தில் உரிமை உண்டு என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் படவா கோவி, நடிகை அம்மு என பலர் கலந்து கொண்டு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சில விஷயம் இணையத்தில் வைரலாகி பலரும் அவர்களை ட்ரோல் செய்து வருகின்ற நிலையில், சீரியல் நடிகை சந்தியா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு கோபிநாத்தை கிழி கிழி என கிழித்துள்ளார்.
அதில், எல்லாரும் நீயா நானா நிகழ்ச்சியை பார்த்து இருப்பீங்க, அதில் நாய் மீது பாசம் வைத்தவர்கள் அனைவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல பல பேசி இருக்கிறார்கள். விஜய் டிவி முழுக்க முழுக்க மனிதர்களின் நலன் பற்றி கவலை கொள்ளும் தொலைக்காட்சியாக இருக்கிறது. அதனால், தான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் யானையால் தாக்கப்பட்டேன். இதனால் என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமானது 18 தையல்கள், உடலில் இன்னும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.

நியாயம் வேண்டும்: அந்த நேரத்தில் நீயா நானாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அதில் கலந்து கொண்டு பேசியவர்கள் அனைவரும் என்னை குற்றவாளி ஆக்கி பேசினார்கள். யானையால் பாதிக்கப்பட்டது நானாக இருக்கும்போது என்னை அழைத்து தான், நீங்கள் விவாதம் நடத்திருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாதவர்களிடமும், இன்னும் யார் யாரையோ வைத்து விவாதம் நடத்தி இருந்தீர்கள். இது எந்த வகையில் நியாயம், இப்போது அந்த விஷயத்தை தோண்டி எடுத்து எனக்கு நியாயத்தை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்.
பொறுப்புள்ள மீடியா செய்யும் வேலையா: இவை அனைத்தையும் விஜய் டிவி தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக தான் செய்து வருகிறது. இப்போது, நீங்கள் நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது போல நிகழ்ச்சி நடத்தி நாய்கள் மீதும், நாய் பாதுகாவலர்கள் மீதும் வெறுப்பை தூண்டும் வகையில் விவாதம் நடத்தி இருப்பது ஒரு பொறுப்புள்ள மீடியா செய்யும் வேலையா? கோபிநாத், இந்த சமுதாயத்தில் உங்களுக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நடிகை சந்தியா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











