Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விளம்பரத்திற்காக இப்படியா?... சித்ரா நிலை தான் நட்சத்திராவுக்கும்...பரபரப்பை கிளப்பும் ஸ்ரீநிதி
சென்னை : விஜே சித்ராவின் நிலை நட்சத்திராவிற்கும் வரலாம் என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. விளம்பரத்திற்காக இன்னும் என்னவெல்லாம் பண்ணுவார். இத்தனை நாளாக எங்கிருந்தார் இவர் என நெட்டிசன்கள் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. சீரியல் மூலம் பிரபலமாகவில்லை என்றாலும், சமீப காலமாக இவர் பேசி வரும் விஷயங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. தற்போது பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு மீடியாக்களில் பிரபலமாகி விட்டார் ஸ்ரீநிதி.
ஸ்ட்ரேஞ்சர்
திங்ஸ்
சீசன்
4
தொடரில்
நெட்ஃபிலிக்ஸ்
எடுத்த
அதிரடி
முடிவு

சிம்பு லவ் டார்ச்சர் பண்றார்
சமீபத்தில் நடிகர் சிலம்பரசனை தான் திருமணம் செய்து கொள்ள தயார் என லைவ் சாட்டில் ரசிகரிடம் சொல்லி பரபரப்பை கிளப்பினார். முதலில் அனைவரும் பரபரப்பிற்காக பேசுகிறார் என சாதாரணமாக விட்டனர். ஆனால் ஸ்ரீநிதி தொடர்ந்து, தனக்கு சிம்பு தான் வேண்டும் என அவர் வீட்டு முன் அமர்ந்து நடுராத்திரியில் தர்ணா செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சிம்பு தான் தன்னை காதலிப்பதாக சொன்னதாகவும், அவர் தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாகவும் கூறி அதிர வைத்தார்.

கோமாவிலா இருந்தார் இவர்
கடந்த சில நாட்களாக சிம்புவை பற்றி மட்டும் தான் பேசி வருகிறார் என்று பார்த்தால், நேற்று லைவ்வில் அவர் பேசிய வீடியோ அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது. இருந்தாலும் அவர் பேசிய விஷயங்களை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இத்தனை நாட்களாக இவர் என்ன கோமாவிலா இருந்தார். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எப்படி இந்தம்மா புதிதாக சொல்வதை போல் இப்படி உணர்ச்சிவசமாக சொல்லுகிறது என கண்டபடி கேட்டு வருகின்றனர்.

சித்ரா எனக்கு நெக்கமானவர் இல்லை
நேற்று லைவ் வீடியோவில் பேசிய ஸ்ரீநிதி, நான் போதையில் பேசவில்லை. சாதாரணமாக நான் பேசுவதே இப்படி தான் இருக்கும். எனக்கு யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட பிடிக்காது. எனக்கு மிக நெருக்கமானவர் இல்லை என்றாலும் சித்ராவை எனக்கு நன்கு தெரியும். அவர் காதலிப்பவர் தவறானவர் என சொல்லி என் நண்பர்கள் பலர் அவரிடம் என்னை பேசி புரிய வைக்கும் படி சொன்னார்கள். ஆனால் ஒரு விழாவில் நான் பார்த்த போது அவர் சந்தோஷமாக இருந்தார். அதனால் அவரிடம் பேசவில்லை.

சித்ரா நிலைமையில் நட்சத்திரா
அவர் திடீரென இறந்து விட்டார் என்ற தகவலை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை நான் பேசி இருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பாரோ என இப்போது தோன்றுகிறது. அதே நிலைமை நட்சத்திராவிற்கும் வந்து விடக்கூடாது. நட்சத்திரா எனக்கு நல்ல ஃபிரண்ட். அவரை மனரீதியாக ப்ரசர் கொடுத்து நம்ப வைத்துள்ளார்கள். அதனால் அவர் என்னை நம்ப மறுக்கிறார். வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி 10 நாட்கள் மட்டும் வாழ்ந்த நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு நட்சத்திராவை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

என்ன சொல்ல வருகிறார் இவர்
யார் என நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. அவர்களிடம் இருந்து நட்சத்திராவை காப்பாற்ற தான் வயநாடு கூட்டிச் சென்றேன். ஆனால் அங்கேயும் அவர் வந்தார். எ என்னை அடித்தார். என்னை அடித்தது கூட பரவாயில்லை. சித்ரா நிலையை நட்சத்திராவிற்கும் வந்து விடக்கூடாது. நட்சத்திராவையும் மிஸ் பண்ணிவிட்டோம் என யாரும் வேதனைப்படக் கூடாது. நட்சத்திரா இறந்தால் கூட நான் போக மாட்டேன். இந்த பிரச்சனையால் தான் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். நட்சத்திராவை எப்படியாவது மீட்டு அவரின் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள் என கூறி உள்ளார்.

இப்படி ஒரு விளம்பரம் தேவையா
பிரபல சீரியல் நடிகையான நட்சத்திரா தற்போது தமிழும் சரஸ்வதி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவரை பற்றி ஸ்ரீநிதி இப்படி பேசி உள்ளது பலருக்கும் அதிர்ச்சி தந்ததை விட கோபத்தை தான் தந்துள்ளது. சித்ரா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆக போகிறது. சித்ரா பற்றி பலரும் பேசிய நிலையில் இத்தனை நாட்களாக எங்கிருந்தார் என தெரியாமல் இருந்த இவர், இப்போது எதற்காக சித்ராவை பற்றி பேசுகிறார். ஏற்கனவே சித்ராவின் மரணம் பற்றிய மர்மங்கள் விலகாத நிலையில் அதை வைத்து விளம்பர தேட முயற்சி செய்கிறாரே. விளம்பரத்திற்காக இது போல் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா. சமீபத்தில் கூட ஆந்திராவில் நடிகை ஸ்ரீரெட்டி, விஷால் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார் சொல்லி, அதர நிர்வாண போராட்டம் நடத்தியும் பரபரப்பை கிளப்பினார். இப்போது தமிழில் இவர் கிளம்பி உள்ளார்.