Don't Miss!
- News
"கேக் வாக்".. ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால்.. திக்கு முக்காடி போன திமுக.. காங்கிரசும் குஷியாம்.. போச்சே!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அசீம் பெண்களிடம் தரக்குறைவாக பேசுவார்..உண்மையை உடைத்த சக நடிகை!
சென்னை : அசீம் பெண்களுக்கு மரியாதை கொடுக்கவே மாட்டார், அவர்களை தரக்குறைவாகத்தான் பேசுவார் என அவருடன் நடித்த சக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீரியல் மூலம் பிரபலமான அசீம், பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு பிறகும், ரசிகர்களின் பேராதரவுடன் டாப் லிஸ்டில் இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த போதும், முதல் நாளில் டீக்கு சண்டைபோட ஆரம்பித்த அசீம் இப்போது வரை ஏதாவது ஒரு வம்பை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
பிக் பாஸ் டைட்டில் தான் அவரோட டார்க்கெட்... உண்மையை சொன்ன ஷிவின்... ஒப்புக்கொண்ட அசீம்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் அசீம் சண்டை போடாத ஒரே நபர் யார் என்றால், அது பிக் பாஸ் தான். அவரிடமும் சண்டை போட்டு இருப்பார். குரல் மட்டும் வருவதால் பாவம் பார்த்து விட்டார் போல. ரேங்க டாஸ்கின் ஆயிஷாவை போடி வாடி என ஏக வசனத்தில் அழைத்த அசீம். விக்ரமனையும் அரசியல்வாதி வேலை எல்லாம் வெளியில் வெச்சிங்கோ என காலரை தூக்கிவிட்டு சண்டை போட்டார்.

கமலிடம் சிக்கிய அசீம்
இதற்கு கமல் கண்டனம் தெரிவித்து கோவத்தை குறைத்துக்கொள்ளுங்கள் அசீம் என அட்வைஸ் கொடுத்தார். அப்போது சரி சரி என தலையை ஆட்டிய அசீம். அடுத்த வாரமே ஷிவினைப் போல இமிட்டேட் செய்து அவரை, கிண்டலடித்ததார். இதனால், இணையத்தில், அசீமிக்கு எதிரான கருத்துகள் டிரெண்டாகின. இதையடுத்து, அசீமை கமல் கடுமையாக எச்சரித்தார்.

பெரும் ஆதரவு
வீட்டில் இருப்பவர் அசீமை எப்படியாவது வெளியில் அனுப்பிவிட வேண்டும் என தொடர்ந்து அவரின் பெயரை நாமினேட் செய்து வருகின்றனர். கடந்த பத்து வாரத்தில் இவர் நாமினேட் ஆகாத வாரமே இல்லை என்று சொல்லாம். ஒரு பக்கம் போட்டியாளர்கள், மறு பக்கம் கமல், அசீமை தொடர்ந்து வறுத்தெடுத்து வரும் நிலையில், மக்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அசீம் எப்போதும் அப்படித்தான்
இந்நிலையில், அசீமுடன் சீரியலில் இணைந்து நடித்த சுபத்ரா, அசீம் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். பூவே உனக்காக சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்துள்ளேன். நாங்கள் அனைவரும் காலை 7 மணிக்கே மேக்கப் போட்டு ரெடியாக அசீமுக்காக காத்திருப்போம். ஆனால்,11 மணிக்குத்தான் வருவார். லேட்டா வந்த போதும் மேக்கப்போட்டு ரெடியாகாமல் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும் என்பார்.

எப்போதும் தாமதமாகத்தான் வருவார்
அந்த சீரியலில் வர்ஷினி கர்ப்பிணிபெண்ணாக நடித்திருந்தார். இதற்காக அந்த பெண் காலை 7 மணிக்கே வயிற்றில் ஒரு பேட் போன்று வைத்திருப்பார்கள். ஷூட்டிங் இப்படி தாமதமாகி கொண்டே இருப்பதால் அவருக்கு முதுகுத்தண்டில் வலிப்பதாக கூறினார். மேலும், தினமும் அசீம் தாமதமாக வருவதால் ஷூட்டிங் முடிய இரவாகி விடுகிறது என்று வர்ஷினி கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தார்.

செருப்பால் அடிபேன் என்றார்
வர்ஷினி கோபத்தில் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த, அசீம் நான் எப்போது வரவேண்டும் என்று நீங்க சொல்லதீங்க, நீங்க ஒன்னும் டைரைக்டர் இல்லை என்று சண்டை போட்டார். கடைசியில் அந்த பெண்னை செருப்பால் அடிபேன் என்றும் வாடி போடி என்று பேசினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் 40பேர் இருக்கும் போது அசீம் அப்படி பேசியதால், அந்த பெண்ணு பயங்கரமாக அழுதார். கடைசியில் நாங்கள் அனைவரும் அசிம் மன்னிப்பு கேட்டதால் தான் நடிப்போம் என்று சொன்ன பிறகு அசீம் மன்னிப்பு கேட்டார் என்றார்