»   »  காமெடி ரூட்டுக்கு மாறும் சீரியஸ் தமிழ் இயக்குநர்கள்!

காமெடி ரூட்டுக்கு மாறும் சீரியஸ் தமிழ் இயக்குநர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம், பாலா, மிஷ்கின், செல்வராகவன் இவங்களையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்ப்பீர்கள்? அதே தான்... படு சீரியஸான இயக்குநர்கள் என்றுதானே? அவர்களே ரூட்டை மாற்றி களம் இறங்குகிறார்கள்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ரொம்ப்ப்ப்ப்ப சீரியஸான படங்கள் மண்ணை கவ்வுகின்றன. அதற்கு பதிலாக காமெடி படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கின்றன. நன்கு தெரிந்த காஸ்டிங், சிம்பிள் நாட், பக்கா காமெடி, கொஞ்சம் கலர்ஃபுல் சேர்ந்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஷ்யூர் ஹிட் ரெடி... இந்த சூழலைப் புரிந்து அதற்கு தகுந்தாற்போல் மாறியிருக்கின்றனர் இந்த நான்கு பேரும்...

மணிரத்னம்

மணிரத்னம்

கார்த்தி - அதிதி ஜோடியாக நடிக்கும் காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதில் முக்கிய வேடத்தில் நடிப்பது ஆர்ஜே பாலாஜி. மணிரத்னம் தன் படத்தில் காமெடி நடிகர்களை காமெடிக்கு என்று பயன்படுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக இயக்கிய ராவணன், கடல், ஓகே கண்மணி ஆகிய படங்களில் காமெடிகளை பொறுக்கித் தான் எடுக்க வேண்டும். ஆனால் காற்று வெளியிடை படத்தில் கார்த்தியுடனேயே வருகிறார் ஆர்ஜேபாலாஜி. படம் முழுக்கவே சிரிக்க வைக்கிறார் பாலாஜி.

பாலா

பாலா

சாட்டை யுவனையும் சூப்பர் சிங்கர் பிரகதியையும் இணைத்து இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தை இயக்கி வருகிறார் பாலா. இந்த படம் மட்டுமல்ல இன்னும் சில ஆண்டுகளுக்கு சீரியஸ் படங்களே கிடையாதாம். சங்கை கடிப்பதில் இருந்து சில படங்களுக்கு விதிவிலக்கு தந்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய காதல் படமாம். ஐயர் வீட்டு பையன் கீழ் சாதி பெண்ணை காதலிப்பது போல கதை நகர்கிறது என்கிறார்கள்.

மிஷ்கின்

மிஷ்கின்

தலையை குனிந்தபடியே படம் முழுக்க நடப்பது, ஜியோ சிம்முக்கு காத்திருக்கும் இளைஞர்கள் வரிசை போல வரிசையாக வந்து வில்லன் ஆட்கள் அடி வாங்குவது போன்ற சீரியஸ் காட்சிகள் இல்லாமலேயே மிஷ்கினின் சவரக்கத்தி உருவாகி இருக்கிறது. இந்த படத்திலும் காமெடிதான் பிரதானம்.

செல்வராகவன்

செல்வராகவன்

சீரியஸ் ரூட்டால் சில ஆண்டுகள் படமே இல்லாமல் தவித்த செல்வா இப்போது பேயை துணைக்கு நாடியிருக்கிறார். ஹாரர் காமெடியான நெஞ்சம் மறப்பதில்லை முடிந்த பிறகு சந்தானத்தை இயக்கவிருக்கிறார். இதுவும் காமெடி கலந்த கதை தான்.
ஆக, எண்டெர்டெய்னர் தான் இப்போதைக்கு ஹிட் அடிக்க ஒரே வழி என்பதை இயக்குநர்கள் புரிந்துகொண்டு விட்டனர். கொஞ்ச நாளைக்கு படம் பார்த்துட்டு சிரிச்ச முகமா வெளில வரலாம்!

English summary
Tamil serious directors like Bala, Manirathnam are shifting their focus to comedy genre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil