twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சேர்ந்து போலாமா'.. முழுக்க முழுக்க நியூஸிலாந்தில் எடுக்கப்பட்ட முதல் படம்!

    By Shankar
    |

    சென்னை: முழுக்க முழுக்க நியூஸிலாந்திலேயே ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துள்ளார் ஒரு மலையாள இயக்குநர்.

    படத்துக்குப் பெயர் சேர்ந்து போலாமா. இயக்குநர் : அனில்குமார்.

    பாடல் காட்சிகளில் சில நிமிடங்கள் இடம் பெறும் காட்சிகளுக்காகவே நியூஸிலாந்து செல்வதை பெருமையாகக் கூறுவார்கள். ஆனால் இந்தப் படமோ மொத்தமாக நியூஸிலாந்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.

    அனில்குமார்

    அனில்குமார்

    இயக்குநர் அனில் குமார், மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற நட்சத்திரங்களை வைத்து 'கலியுஞ்ஞால்', 'குடும்ப விசேஷம்' 'பட்டாபிஷேகம்', 'பார்த்தன் கண்ட பரலோகம்', 'மாந்திரீகம்', 'க்ளைமாக்ஸ்' உள்பட 39 படங்களை இயக்கியிருப்பவர். ஜெயராமை வைத்தே 10 படங்கள் இயக்கியுள்ளார். 'சேர்ந்து போலாமா' இவரது 40 வது படம்.

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இவர் இயக்கிய 'க்ளைமாக்ஸ்' தமிழில் 'ஒரு நடிகையின் கதை' யாக வெளியானது நினைவிருக்கலாம்

    நியூஸிலாந்து வாழ் தயாரிப்பாளர்

    நியூஸிலாந்து வாழ் தயாரிப்பாளர்

    ஐஸ்வர்யா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிப்பவர் சசி நம்பீசன். இவர் நியூஸிலாந்தில் 16 ஆண்டுகளாக வசித்து வருபவர். பூர்வீகம் கேரளா திருச்சூர் என்றாலும் சென்னையில் இவரது தந்தை சட்டக் கல்லூரியில் பணியாற்றியதால் தமிழ்ப் படங்கள் மீது தீராத காதல் கொண்டாராம். எம்.ஜி.ஆர் படங்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி!

    கரோக்கி பாடகர்

    கரோக்கி பாடகர்

    பிறப்பில் மலையாளியாக இவர் இருந்தாலும் தமிழ்ப்படப் பாடல்கள் மீது இவருக்கு தீராத மோகம். கரோக்கி பாடகரான இவர் நியூஸிலாந்து நிகழ்ச்சியில் முதலில் பாடிய பாடல் 'பூவே பூச்சூடவா ' என்ற தமிழ்ப் பாடல் என்றால் இவரைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா... அப்படிப்பட்ட சசி நம்பீசன் தமிழில் முதல் படம் தயாரிப்பதில் வியப்பில்லை.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    தமிழில் எந்த புது முயற்சிக்கும் வரவேற்பு தருவார்கள் என்றும் அந்த நம்பிக்கையில் இப்படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

    வினய் - மதுரிமா

    வினய் - மதுரிமா

    இந்தப் படத்தில் வினய் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக வரும் மதுரிமா தெலுங்கு, இந்தியில் சில படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் ப்ரீத்திபால் நடித்திருக்கிறார். தெலுங்கில் நாயகனாக வளர்ந்து வரும் நந்துவும் இதில் நடித்துள்ளார். அருண், தம்பிராமையா, தலைவாசல் விஜய், அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    தம்பி ராமையா ஜோடியாக வெள்ளைக்காரப் பெண்

    தம்பி ராமையா ஜோடியாக வெள்ளைக்காரப் பெண்

    நியூஸிலாந்து நாட்டு மக்கள் இப்படத்தில் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அங்கிருந்து 60 வெள்ளைக்கார ஆண்கள் பெண்கள் நடித்துள்ளார்கள். தம்பி ராமையா ஜோடியாக நடித்துள்ளது கூட வெள்ளைக்காரப் பெண்மணிதான் என்றால் பாருங்களேன்.

    நட்பை உயர்த்தும் கதை

    நட்பை உயர்த்தும் கதை

    இது நட்பை உயர்த்திப் பிடிக்கும் கதை தான் என்றாலும் உள்ளே ஊடாடும் காதலும் உள்ளது.

    நியூஸிலாந்தின் தெற்கு தீவைச் சேர்ந்த இளைஞர், இளைஞிகள் என ஏழுபேர் கால ஓட்டத்தில் பிரிந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் தொலைந்து போன தங்கள் பால்யத்தையும், பிரிந்து போன நட்பையும் தேடிப் புறப்படுகிறார்கள். வடக்கே ஆக்லாண்டிலிருந்து தெற்கு தீவுக்கு பயணப் படுகிறார்கள்.

    இடையில் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆபத்தைக் கடந்து அவர்கள் நட்பு வென்றதா? அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல், தளிர் விட்டு வளர்ந்ததா என்பதே கதை.

    அழகிய லொகேஷன்கள்

    அழகிய லொகேஷன்கள்

    தமிழர்கள் வசிக்கும் முக்கிய நாடுகளில் நியூஸிலாந்தும் ஒன்று, இது இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் நாடாகும். இந்நாட்டில் ரொமான்சுக்கு பஞ்சமில்லை. இங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதி உண்டு தமிழ் சங்கங்களும் உண்டு.

    நியூஸிலாந்து தலைநகரம் ஆக்லாண்ட் உலகின் 10 அழகிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்பெயரில் இங்கு ஒரு மாநிலமும் உண்டு. இது நியூஸிலாந்தின் வடபகுதியில் உள்ளது. இந்நகரத்திலிருந்து சவுத் ஐலண்ட் எனப்படும் தெற்கு தீவுக்குக் கதை நகர்கிறது. இதற்காக சுமார் 500 கி.மீ தூரம் கதையோடு படக்குழுவும் பயணித்துள்ளது. இதற்காக கார், பஸ், ட்ரக், படகு போன்ற வாகனங்களில் மட்டுமல்ல, கால்நடையாகவும் படக்குழுவின் பயணம் தொடர்ந்திருக்கிறது.

    நியூஸிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. நகரம், காடு, மலை, அருவி, கடல், மணல்வெளி என்று பல்வேறு புவியியல் அமைப்புகளிலும் கேமரா சுழன்று சுழன்று படப்பதிவு செய்துள்ளது.

    தொழில்நுட்பக் கலைஞர்கள்

    தொழில்நுட்பக் கலைஞர்கள்

    ஒளிப்பதிவு- சஞ்சீவ் சங்கர், இசை- விஷ்ணு மோகன் சித்தாரா, படத் தொகுப்பு-அர்ஜுபென், கதை திரைக்கதை- ரவி மேத்யூ, வசனம்- ரவிதரன் ராமசாமி, பாடல்கள்- கருணாகரன், தவா.

    இறுதிக்கட்ட வேலைகள்

    இறுதிக்கட்ட வேலைகள்

    படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. விரைவில் வெளிவரவுள்ளது. பாஸ்போர்ட், விசா இல்லாமல் நாமும் நியூஸிலாந்து பயணம் 'சேர்ந்து போலாமா?

    English summary
    Sernthu Polama is a new Tamil film directed by popular Malayalam director Arunkumar. The film's is entirely shoot at New Zealand for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X