»   »  பிறந்தது விடிவு... செப்டம்பர் 11-ல் வெளியாகும் சர்வர் சுந்தரம்!

பிறந்தது விடிவு... செப்டம்பர் 11-ல் வெளியாகும் சர்வர் சுந்தரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று எனச் சொல்லப்பட்ட சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', நாளாக நாளாக நமுத்துப் போன பட்டாசாக மாறிவிட்டது.

ட்ரைலர் வெளியாகி, ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தள்ளிப் போடப்பட்ட இந்தப் படம் வருமா வராதா என்று கேட்கும் அளவுக்குப் போய்விட்டது.

Server Sundaram from Sep 11th

இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதன்படி 'சர்வர் சுந்தரம்' படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகிறது. இப்படத்தில் 'சர்வர்' கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடைவிடா சிரிப்பு வெள்ளமாக இப்படம் இருக்கும் என்கிறார் புதிய இயக்குநர் ஆனந்த் பால்கி.

'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

English summary
Santhanam's long delayed Server Sundaram movie will be hits screens on September 11th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X