»   »  போலீஸ் தான் ஹீரோ, போலீஸ் தான் கெத்து...விஜய் 'சேதுபதி'யை பாராட்டும் ரசிகர்கள்

போலீஸ் தான் ஹீரோ, போலீஸ் தான் கெத்து...விஜய் 'சேதுபதி'யை பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பண்ணையாரும் பத்மினியும்' புகழ் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் சேதுபதி.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.


விஜய் சேதுபதி ஆக்ஷன் 'சேதுபதி'யாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தாரா? என்பதை பார்க்கலாம்.


ரவுடியில்ல போலீஸ் தான்

"போலீஸ் தான் ஹீரோ, போலீஸ் தான் கெத்து.-புல்லட் தெறிக்கும் சேதுபதி" என்று சேதுபதியை பாராட்டி இருக்கிறார் ஸ்ரீதர்.


போலீஸ்க்கும்

"ஒரு போலீஸ்க்கும் அவரது குடும்பத்திற்கும் இடையேயான பிணைப்பை சேதுபதி அழகாக எடுத்துக் கூறுகிறது. எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் கூடிய இடைவேளை" என்று பாராட்டி இருக்கிறார் ராஜசேகர்.


விஜய் சேதுபதியை

"விஜய் சேதுபதியின் போலீஸ் அவதாரம் விருந்து. முதல் பாதி மிக, மிக சுவாரஸ்யமாக உள்ளது" என்று பாராட்டி இருக்கிறார் ஹரிசரண்.


கெத்து போலீஸ்

'கோலிவுட்'க்கு புது போலீஸ்...இல்ல இல்ல கெத்து போலீஸ் கிடைச்சிருக்கு " என்று பாராட்டி இருக்கும் சிவா இந்தப் படம் விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோ பட்டியலில் இணைத்து விட்டது என்று கூறியிருக்கிறார்.


சேதுபதி அபத்தமில்லாத

"வழக்கமான போலீஸ் படங்கள் போல எந்த ஒரு அபத்தமும் இன்றி விஜய் சேதுபதியின் 'சேதுபதி' வசீகரிக்கிறது" என்று பாராட்டி இருக்கிறார் ரைஸா நஷ்ரீன்.


முதல் பாதி

"சேதுபதி முதல் பாதி நன்றாகவும், 2 வது பாதி சுமாராகவும் உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளில் திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் எனினும் வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து வித்தியாசம். மொத்தத்தில் விஜய் சேதுபதியின் சேதுபதி சராசரி" என்று படத்திற்கு விமர்சனம் வழங்கி இருக்கிறார் நாராயணன்.


மொத்தத்தில் விஜய் 'சேதுபதி'யின் இந்த போலீஸ் அவதாரம் தங்களை மிகவும் கவர்ந்ததாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.English summary
Vijay Sethupathi, Remya Nambeesan Starrer Sethupathi Today Released Worldwide, Written and Directed by S.U.Arun Kumar - Live Audience Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil