»   »  சினிமாவால் 20 கோடிகளை இழந்தேன்- பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

சினிமாவால் 20 கோடிகளை இழந்தேன்- பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமுகங்கள் நடித்து வெளிவர இருக்கும் சேட்டைக்காரங்க படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. புதுமுகங்களை வாழ்த்திப் பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன் சினிமாவால் சுமார் 20 கோடிகள் வரை இழந்ததாக கூறினார்.

புதுமுகங்கள் விஷ்வா- கீர்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் சேட்டைக்காரங்க படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் படத்தின் பாடலாசிரியர்கள் தமிழ்க் குமரன், கவி கருப்பையன், இசையமைப்பாளர் கவி கண்ணன் மற்றும் இயக்குநர் முத்து மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளிவராத பதிலடி

வெளிவராத பதிலடி

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் அறிமுக நடிகர் விஷ்வாவிடம் இது உங்கள் முதல் படமா என்று கேட்டேன் இல்லை பதிலடி என்று ஒரு படம் ஏற்கனவே நடித்து முடித்திருக்கிறேன் படம் இன்னும் வெளிவரவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.

சினிமாவால் 3 கோடி வரை இழந்த அறிமுக ஹீரோ

சினிமாவால் 3 கோடி வரை இழந்த அறிமுக ஹீரோ

மேலும் சினிமா ஆசையால் சுமார் 3 கோடி ரூபாய் வரை இழந்துவிட்டேன் என்று புதுமுக நாயகன் விஷ்வா என்னிடம் கூறினார். அதனைக் கேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது என்று பவர் வருத்தப் பட்டார்.

உனக்கு 3கோடி எனக்கு 20 கோடி

உனக்கு 3கோடி எனக்கு 20 கோடி

இதே சினிமாவில் நானும் சுமார் 20 கோடி வரை இழந்து விட்டேன் என்று ஆறுதல் கூறி அவரைத் தேற்றி இருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

தயாரிப்பாளர் கணவன்- இயக்குநர் மனைவி

தயாரிப்பாளர் கணவன்- இயக்குநர் மனைவி

திரையுலகைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் - இயக்குநர் இருவருமே கணவன் மனைவி மாதிரி, ஒருவர் மற்றவரை அனுசரித்துப் போகவேண்டும் ஏனெனில் தயாரிப்பாளர்கள் இல்லையெனில் படங்களை எடுக்க முடியாது இந்த உண்மையை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

படம் நன்றாக ஓட வாழ்த்துக்கள்

படம் நன்றாக ஓட வாழ்த்துக்கள்

படம் நன்றாக ஓட வாழ்த்துக்கள், வந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உஷாராக கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார் பவர் ஸ்டார்.

கல்லூரிக்குச் செல்லும் ஹீரோயின்

கல்லூரிக்குச் செல்லும் ஹீரோயின்

படத்தில் நாயகி கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறாராம், படத்தை தயாரிப்பாளர்கள் சிவராசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக தயாரித்து இருக்கின்றனர்.

English summary
Settaikkaranga Movie Audio And Trailer Launched For Yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil