»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை மட்டும் 7 புதிய படங்கள் வெளியாகின்றன.

தேர்தல் பரபரப்பு காலத்தில் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என்பதால், பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரைக்கு கொண்டு வரும் தேதியை சில வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். விஜய்யின் ‘தெறி,' உதயநிதியின் ‘மனிதன்,' சூர்யாவின் ‘24' ஆகிய படங்கள் மட்டும் தேர்தலுக்கு மத்தியில் வெளியானது.


தற்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன. விஷாலின் ‘மருது' படம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளான கடந்த 20-ந்தேதி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.


5 தமிழ்ப் படங்கள்

5 தமிழ்ப் படங்கள்

‘இது நம்ம ஆளு,' ‘உரியடி,' ‘சுட்டபழம் சுடாத பழம்,' ‘மீரா ஜாக்கிரதை,' ‘ஜெனிபர் கருப்பையா' ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.


ஆங்கிரி பேர்ட்ஸ்

ஆங்கிரி பேர்ட்ஸ்

குழந்தைகள் அதிகம் எதிர்ப்பார்த்த ஹாலிவுட் படமான ‘ஆங்கிரி பேர்ட்ஸ்' படமும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. டோனி ஜா நடித்த ‘கில்ஸோன்-2' என்ற படமும் இன்று வெளியாகிறது.


7 படங்கள்

7 படங்கள்

இந்த 7 படங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.


சர்ச்சைப் படம் இது நம்ம ஆளு

சர்ச்சைப் படம் இது நம்ம ஆளு

‘இது நம்ம ஆளு' படத்தில் சிம்பு- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். காதல் சர்ச்சைகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து இருப்பதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. டி ராஜேந்தர் தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.


சுட்ட பழம் சுடாத பழம்

சுட்ட பழம் சுடாத பழம்

‘சுட்ட பழம் சுடாத பழம்,' குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி தயாராகி உள்ளது. சிவா.ஜி. இயக்கியுள்ளார்.


மீரா ஜாக்கிரதை

மீரா ஜாக்கிரதை

‘மீரா ஜாக்கிரதை,' காதல், பழிவாங்கல், நகைச்சுவை, திகில் கலந்த படமாக உருவாகி உள்ளது. இதில் பாபிசிம்ஹா வில்லனாக வருகிறார். கேசவன் இயக்கியுள்ளார்.


ஜெனிபர் கருப்பையா

ஜெனிபர் கருப்பையா

‘ஜெனிபர் கருப்பையா,' காதல் கதையம்சம் உள்ள படம். சரவணபாண்டி இயக்கத்தில் புதியவர்கள் நடித்துள்ளனர்.


உரியடி

உரியடி

‘உரியடி' படம், காதல் ஜோடிக்கு உதவும் நண்பர்களின் கதை. இந்த படத்தை விஜய்குமார் டைரக்டு செய்துள்ளார்.


English summary
Today Friday there are 7 movies including two Hollywood flicks and 5 Tamil movies are releasing all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil