தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்! - ராதிகா ஆப்தே

By Shankar

சென்னை: தென்னிந்திய சினிமாவில் செக்ஸ் தொல்லை இருப்பது உண்மைதான் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமிருப்பதாகவும் வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெலுங்கு, தமிழ், மலையாளத்தில்...

தெலுங்கு, தமிழ், மலையாளத்தில்...

தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் படத் துறையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் சிலர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர். ஆனால் விரிவாக எதுவும் சொல்லவில்லை.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவும் இப்போது இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இந்தி பட உலகில் விவகாரமான நடிகையாக அறியப்பட்டவர் ராதிகா ஆப்தே. அரைகுறை ஆடையில் ராதிகா ஆப்தே உள்ள பட படங்கள் ஆன்லைனில் வலம் வந்தன. இதற்கெல்லாம் உச்சமாக அவரது நிர்வாண வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர்னு படுக்கைக்கு கூப்பிட்டார்

திடீர்னு படுக்கைக்கு கூப்பிட்டார்

தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே கூறுகையில், "தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான். நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன்.

மறுத்துவிட்டேன்

மறுத்துவிட்டேன்

நான் அவருக்கு உடன்படவில்லை. இப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X