»   »  பலாத்காரம், சுயஇன்பம், தடவல்: பிரபல தயாரிப்பாளரின் கருமம் பிடித்த செயல்கள் அம்பலம்

பலாத்காரம், சுயஇன்பம், தடவல்: பிரபல தயாரிப்பாளரின் கருமம் பிடித்த செயல்கள் அம்பலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை உள்பட 3 பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து ஹாலிவுட்டில் பேச்சாக இருந்தது.

இந்நிலையில் தி நியூயார்க்கர் பத்திரிகை வெயின்ஸ்டீனின் முகத்திரையை கிழித்துள்ளது.

3 பெண்கள்

3 பெண்கள்

இத்தாலிய நடிகை ஏசியா அர்ஜென்டோ, நடிகையாகத் துடித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட மூன்று பெண்கள் வெயின்ஸ்டீன் தங்களை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

வெயின்ஸ்டீன்

வெயின்ஸ்டீன்

1999ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின்போது வெயின்ஸ்டீன் வலுக்கட்டாயமாக தன்னிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டதாக அர்ஜென்டோ தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

2004ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லூசியா இவான்ஸ் நடிகையாக ஆசைப்பட்டு வெயின்ஸ்டீனின் மிராமேக்ஸ் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அப்போது வெயின்ஸ்டீன் கட்டாயப்படுத்தி லூசியாவை தனக்கு ஓரல் செக்ஸ் செய்ய வைத்துள்ளார்.

ஜூலி

ஜூலி

வெயின்ஸ்டீன் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் நடிகைகள் குவைனத் பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

அசிங்கம்

அசிங்கம்

வெயின்ஸ்டீன் தங்களை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பெண்கள் தெரிவித்துள்ளனர். மாடல் அழகி அம்ப்ராவை கண்ட இடத்தில் தொட்டு தடவியதை வெயின்ஸ்டீனே ஒப்புக் கொண்டுள்ளார்.

காமுகன்

காமுகன்

வெயின்ஸ்டீன் தங்களின் முன்பு ஆடையை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நின்றதாகவும், தங்களை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்ததாகவும் 4 பெண்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Sexual assault complaints are piling up against Hollywood producer Harvey Weinstein.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil