»   »  என் மார்பை பிடித்தார், என் 'பேக்'கை பிடித்தார்: நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்

என் மார்பை பிடித்தார், என் 'பேக்'கை பிடித்தார்: நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் தனது மார்பை பிடித்ததாக நடிகை புகார் தெரிவித்த நிலையில் பென் மீது மேக்கப் கலைஞரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீது பாலியல் புகார்கள் வந்து குவிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பென் அஃப்லெக் ஹாலிவுட் நடிகை ஹிலரி பர்டனின் இடப்பக்க மார்பை பிடித்துள்ளார்.

இதை ஹிலரி அண்மையில் டிவி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

பென் அஃப்லெக்

பென் அஃப்லெக்

பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக தற்போது ஹிலரி பர்டனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பென் அஃப்லெக். இதை பார்த்த ஹாலிவுட் பெண் மேக்கப் கலைஞர் அன்னாமேரி டெண்ட்லர் பென் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

தகாத செயல்

2014ம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப்ஸ் பார்ட்டியில் பென் அஃப்லெக் என் பின்பக்கத்தை பிடித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்னாமேரி ட்வீட்டியுள்ளார்.

பென்

பென் அஃப்லெக் என் அருகில் வந்து என் பின்புறத்தை பிடித்தார் என்கிறார் அன்னாமேரி.

நினைக்கிறேன்

என்னை ஒதுங்கி நிற்கச் சொல்லி இடுப்பை தொடுவதற்கு பதில் பின்புறத்தை தொட்டது போன்று நடிக்க முயன்றார் என்று நினைக்கிறேன்.

அன்னாமேரி

பல பெண்களை போன்று நானும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவரை மறுபடியும் பார்த்தால் என்ன சொல்வது என்று நிறைய யோசித்துள்ளேன் என்கிறார் அன்னாமேரி.

English summary
After Hollywood actor Ben Affleck tendered apology to actress Hillary Burton for touching her breasts, makeup artist Annamarie Tendler accused the actor of cupping her butt.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil