‘ஹேப்பி பர்த்டே சுனிதா’ நாடகத்திற்காக லண்டன் பறந்த ஷபானா ஆஸ்மி
மும்பை: பிரபல நடிகையான ஷபானா ஆஸ்மி இங்கிலாந்து நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான ஷபானா ஆஸ்மி, பயர் உள்ளிட்ட பரபரப்பு படங்களில் நடித்தவர். இவருக்கு நாடகங்கள் மீது தீராக் காதல். இவர் நாடோடி போல நாடகங்களுக்காகச் சுற்றிக் கொண்டிருப்பதாக தன்னை தன் கணவரே கிண்டலடித்திருப்பதாக ஷபானா ஆஸ்மி முன்பொரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாடகக் கம்பெனியின் நாடகமொன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி.

நாடக நிறுவனம்...
லண்டனில் உள்ள நாடக நிறுவனம் ‘ரிஃப்கோ ஆர்ட்ஸ்'. ஏற்கனவே, பிரிட்டன்ஸ் காட் பங்கரா, பிரேக் தி ஃப்ளோர்போர்ட்ஸ் மற்றும் டிரேஞ்ச்ட் மேரேஜ் போன்ற நாடகங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹேப்பி பர்த்டே சுனிதா...
இந்நிலையில், புதிதாக ஹேப்பி பர்த்டே சுனிதா' என்ற தலைப்பில் புதிய நாடகம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.

பஞ்சாபி மனைவி...
ஹார்வே விர்தி மற்றும் பர்வேஷ்குமார் ஆகியோர் இந்த நாடகத்தை இயக்குகிறார்கள். இந்த நாடகத்தில் மத்தியதர பஞ்சாபி மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷபானா ஆஸ்மி.

லண்டன் பயணம்...
இதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி. இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்து அந்த நாடகத்தில் நடிக்கவுள்ளதாக, ஷபானா ஆஸ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒத்திகை...
மேலும், இந்த நாடகத்திற்காக ஒத்திகை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த நாடகத்தின் முதல் ஷோ வரும் செப்டம்பர் 19ந்தேதி அரங்கேற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











