»   »  மனைவியைப் பிரிந்த பர்ஹான் அக்தர்.. நான் கருத்துச் சொல்ல மாட்டேன்... சித்தி ஷபானா ஆஸ்மி

மனைவியைப் பிரிந்த பர்ஹான் அக்தர்.. நான் கருத்துச் சொல்ல மாட்டேன்... சித்தி ஷபானா ஆஸ்மி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல நடிகர் பர்ஹான் அக்தரும், அவரது மனைவி அதுனாவும் பிரி்ந்து விட்டது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் பர்ஹான் அக்தரின் சித்தியான பழம் பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி.

இதுதொடர்பாக நான் எந்த விளக்கமும், கருத்தும் சொல்லப் போவதவில்லை என்றும் ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார். கடந்த 15 வருடமாக இணைந்து வாழ்ந்து வந்த ஜோடி பர்ஹான் அக்தர் - அதுனா தம்பதிகள்.

தற்போது இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்துள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக் மில்கா பாக் ஸ்டார்

பாக் மில்கா பாக் ஸ்டார்

பாக் மில்கா படம் பர்ஹான் அக்தருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இவரது மனைவி அதுனா. கடந்த 15 வருடமாக மகிழ்ச்சிகரமாக இந்தத் தம்பதி குடும்பம் நடத்தி வந்தது. அதுனா ஒரு ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆவார்.

42 வயது அக்தர்

42 வயது அக்தர்

பர்ஹான் அக்தருக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஹனி இராணி ஆகியோருக்குப் பிறந்தவர் ஆவார். ஷபானா, இவருக்கு சித்தி ஆவார்.

நான் கருத்து சொல்ல மாட்டேன்

நான் கருத்து சொல்ல மாட்டேன்

இந்த விவகாரம் குறித்து ஷபானா ஆஸ்மி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். இதில் நான் கருத்து சொல்ல ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. எனவே சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார் ஷபானா.

பிரிவுக்குக் காரணம் ஆதிதி ராவ்?

பிரிவுக்குக் காரணம் ஆதிதி ராவ்?

பர்ஹான் அக்தரும், அதுனாவும் பிரிய, பர்ஹான் அக்தருடன் வஸிர் படத்தில் நடித்த நடிகையான ஆதிதி ராவ் ஹயாத்ரிதான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆதிதி ராவுடன், பர்ஹான் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

அக்தர் குடும்பத்துடன் நெருங்கிய ஆதிதி

அக்தர் குடும்பத்துடன் நெருங்கிய ஆதிதி

மேலும் ஆதிதி ராவ் ஜாவேத் அக்தர் குடும்பத்தினருடன் நெருக்கமாகவும் பழகி வருகிறார். இதுவும், பர்ஹான் அக்தர் - அதுனா பிரிவுக்கான காரணம் ஆதிதிதான் என்பதைக் கூறுவதாக உள்ளது.

கருத்து சொல்ல ஆதிதி மறுப்பு

கருத்து சொல்ல ஆதிதி மறுப்பு

சமீபத்தில் நடந்த விருது விழாவில் ஆதிதி ராவ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பர்ஹானும், அதுனாவும் பிரிய நீங்கள்தான் காரணமா என்று கேட்டபோது, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்.

அமைதி விரும்புவோருக்கு அது தேவை

அமைதி விரும்புவோருக்கு அது தேவை


ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் அமைதியும், கெளரவமும் கிடைக்க வேண்டும். அதை அவர்களுக்குத் தர நான் விரும்புகிறேன் என்றார் அவர்.

இவர் உண்மையில் யாருக்கு அமைதி கொடுக்க விரும்புகிறார்..?

English summary
Veteran actress Shabana is tightlipped on Farhan-Adhuna split and refused to comment on the issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil