Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாங்க இருக்கோம்.. "பத்மாவதி" தீபிகாவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு!
மும்பை: பத்மாவதி பட விவகாரத்தில் தீபிகா படுகோனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாலிவுட் டாப் ஸ்டார்களான ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் தங்களின் ஆதரவை பகீரங்கமாக தெரிவித்துள்ளனர்.
ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி அந்த படத்தை தடை செய்ய ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த படத்தை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டங்களும் அரங்கேறி வருகின்றன.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக ஊடக பிரிவு தலைவர் சூரஜ் பால் அமு பத்மாவதியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அந்த படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்தி திரையுலகம் கண்டனம்
அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூரஜ் பால் அமுவுக்கு இந்தி திரையுலக நட்சத்திரங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேரில் சந்தித்த அமீர்கான்
இந்நிலையில் பத்மாவதி பட விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோனுக்கு பாலிவுட்டு டாப் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோரும் பகீரங்கமாக தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். தீபிகா படுகோன் தலைக்கு பாஜக நிர்வாகி பரிசு அறிவித்த செய்தியை கேட்ட அமீர்கான் தீபிகா படுகோனை நேரில் அழைத்து சந்தித்தாராம்.

நீண்ட நேரம் பேசிய அமீர்
அப்போது தீபிகா படுகோன் குறித்து அமீர்கான் அதிக கவலைப்பட்டாராம். மேலும் தற்போதைய சூழ்நிலை குறித்தும் தீபிகாவும் அமீர்கானும் நீண்ட நேரம் பேசி தீர்த்துள்ளனர்.

ஷாருக்கானும் ஆதரவு
அப்போது தேவைப்பட்டால் ஆதரவுக்கு தான் இருப்பதாக அமீர்கான் அவருக்கு உறுதியளித்துள்ளார். இதேபோல் நடிகர் ஷாருக்கானும் தீபிகாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

படு ஸ்ட்ராங்காக தீபிகா
மொத்த பாலிவுட்டும் தீபிகா படுகோனுக்கு பக்கபலமாக உள்ளது. அதேநேரத்தில் தீபிகாவும் நடப்பது நடக்கட்டும் என தனது நிலைப்பாட்டில் படு ஸ்ட்ராங்காக உள்ளார்.

தீபிகா வீட்டுக்கு பாதுகாப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முதல்வர் சித்தராமையான தீபிகா வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.