»   »  குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ'... சில விநாடிகள் டீசர் வெளியீடு!

குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ'... சில விநாடிகள் டீசர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சில விநாடிகளில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ'.. டீசர் வெளியீடு!- வீடியோ

மும்பை : பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக நடிகைகள் கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஷாருக்கான், குள்ள மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு 'ஜீரோ' என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவலை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Shah rukh khan acts as midget in zero

அத்துடன், ஜீரோ படத்தின் சில நொடிகள் ஓடும் டீசரையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஷாரூக்கான் குள்ள மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாரூக்கானின் தோற்றம் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான 'ஜீரோ' டீசர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி 'ஜீரோ' படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Bollywood actor Shah rukh Khan is acting in a new film directed by Anand L. Rai. Katrina Kaif and Anushka Sharma are acting in the movie with Shah rukh Khan. Shahrukhan, who plays the role of midget, movie titled 'Zero'. Zero film teaser has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X