»   »  30 ஆயிரம் அடி உயரத்தில்..மகனின் 3 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாரூக்கான்

30 ஆயிரம் அடி உயரத்தில்..மகனின் 3 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாரூக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னுடைய கடைசி மகன் அப்ராமின் 3 வது பிறந்தநாளை 30 ஆயிரம் அடி உயரத்தில் நடிகர் ஷாரூக்கான் கொண்டாடியிருக்கிறார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழும் ஷாரூக்கானுக்கு ஆர்யன் கான்(18), சுஹானா கான்(16), அப்ரம் கான் (3) என 3 குழந்தைகள் உள்ளனர்.

Shah Rukh Khan Celebrates Abram's birthday

இதில் கடைசிப் பையன் அப்ராம் மீது ஷாரூக்கான் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். மேலும் எங்கு சென்றாலும் அப்ராமை கூட்டிச் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கோடை விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்த ஷாரூக்கான், லண்டனில் இருந்து விமானத்தில் திரும்பி வரும் வழியில் அப்ராமின் 3 வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்.

30 ஆயிரம் அடி உயரத்தில் அப்ராமின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாரூக்கான் மகனின் பிறந்தநாள் புகைப்படத்தை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்து கொண்டிருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியதால் மிகுந்த சோகத்தில் இருந்த ஷாரூக்கான், தற்போது மகன் அப்ராமின் பிறந்தநாளால் மீண்டும் மகிழ்ச்சிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார்.

English summary
Actor Shah Rukh Khan celebrates his 3rd son Abram's Birthday in 30,000 Feet Distance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil