”விஜய் எப்பவுமே அப்படித்தான்… தேவைப்பட்டா தான் அது நடக்கும்”: ஷாருக்கானும் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை அட்லீ மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாகும் ஜவானில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஜவான் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் குறித்து ஷாருக்கான் போட்டிருந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

சிக்கலில் ஜவான்

சிக்கலில் ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில், ஷாருக்கானுடன், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், ஜவான் படபிடிப்பு மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் கதை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது விஜயகாந்த் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான பேரரசு படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேரரசு படக்குழுவினர் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விரைவில் புகார் அளிக்கப்பட உள்ளதாம்.

ஜவானில் விஜய்?

ஜவானில் விஜய்?

ஜவான் ஷூட்டிங் மும்பையை தொடர்ந்து சென்னையிலும் நடைபெற்றது. அப்போது ஷாருக்கானுக்கு விஜய் விருந்து வைத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தபோது விஜய் அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் கேமியோ ரோலில் நடிப்பதாக படக்குழுவும் இதுவரை அறிவிக்கவே இல்லை. விஜய் நடிப்பதாக இருந்திருந்தால் சென்னையில் நடந்த படப்பிடிப்பிலேயே அவர் ஷாருக்கானுடன் இணைந்திருக்கலாம். ஆனால், அதற்கு இனிமேல் வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

விஜய் பற்றி ஷாருக்கான்

விஜய் பற்றி ஷாருக்கான்

இதனால், ஷாருக்கான், விஜய் கூட்டணியை திரையில் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்களிடம் பேசிய ஷாருக்கான், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் விஜய் குறித்தும் அவருடன் நடிப்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், விஜய் ரொம்பவே கூலான நபர், கதைக்கு தேவைப்பட்டால் தான் அவருடன் நடிக்க முடியும். அது தானாகவே நடந்தால் தான் சரி எனத் தெரிவித்துள்ளார்.

சிறந்த நண்பர்கள்

சிறந்த நண்பர்கள்

விஜய்யும் ஷாருக்கானும் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருக்கின்றனர். அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய்யும் ஷாருக்கானும் சேர்ந்து நடனமாடியது வைரலானது. அதேபோல், இருவரும் அடிக்கடி செல்போனிலும் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். இந்நிலையில், விஜய் குறித்த ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் க்யூட்டாக பதிலளித்துள்ளார். ஷாருக்கானின் இந்த ட்விட்டர் பதிவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X