»   »  தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஷாரூக் - கஜோல் ஜோடி!

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஷாரூக் - கஜோல் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கான் - கஜோல் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

நீண்ட வருடங்களுக்குப் பின்னர் ஷாரூக்கானுடன் கஜோல் இணைந்து நடித்த தில்வாலே திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகின்றது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஷாரூக்கான், கஜோல் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து உள்ளனர்.

முதல்முறையாக

முதல்முறையாக

ஆனால் முதல்முறையாக பாலிவுட்டில் இருந்து ஒரு ஜோடி அதுவும் மிகப்பிரபலமான ஷாரூக்கான் - கஜோல் ஜோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

தில்வாலே

தில்வாலே

இதற்கு முன்னர் சென்னை எக்ஸ்பிரெஸ் படத்தில் இணைந்த ஷாரூக்கான் - ரோஹித் ஷெட்டி இருவரும் 2 வருடம் கழித்து தில்வாலே படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர். சென்னை எக்ஸ்பிரெஸ் படம் வசூலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தததால் இந்தப் படத்திற்கும் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கிறிஸ்துமஸ் விருந்து

கிறிஸ்துமஸ் விருந்து

ஷாரூக்கான் தனது ரசிகர்களுக்கு தில்வாலே படத்தின் மூலம் கிறிஸ்துமஸ் விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறார். மேலும் நீண்ட வருடங்கள் கழித்து கஜோல், ஷாருக்குடன் இணைந்து நடித்திருப்பதால் திரையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

டிசம்பர் முதல் அல்லது

ஷாரூக் - கஜோல் ஜோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி டிசம்பர் முதல் அல்லது 2 வது வாரத்தில் ஒளிபரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Bollywood Actor Shah Rukh Khan and his Co - Star Kajol((dilwale) Last Week took part to Vijay Tv's Reality Show ' Super Singer Junior', The News Confirmed by the Channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil