twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ஷாருக்... என்ன காரணம்?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ஷாருக்... என்ன காரணம்?- வீடியோ

    சென்னை : புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 'விக்ரம் வேதா'.

    ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மாதவனை ரொம்பவும் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷாருக்கானிடம் பேசினார்.

    இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஷாருக்கான், தற்போது இந்தப் படம் தனக்கு சரியாக வராது எனக் கூறி விலகியுள்ளார்.

     விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    தமிழில் நல்ல வெற்றி பெற்றதால் 'விக்ரம் வேதா' படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முடிவில் இருந்தார் மாதவன். இதற்காக இப்படத்தில், விஜய் சேதுபதி வேடத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டமிட்டார்.

    விஜய் சேதுபதி வேடத்தில் ஷாருக்கான்

    விஜய் சேதுபதி வேடத்தில் ஷாருக்கான்

    அதற்காக, ஷாருக்கானிடம் இப்படத்தின் கதையைக் கூறியிருக்கிறார் மாதவன். கதையை கேட்ட ஷாருக்கான் கதை நன்றாக இருக்கிறது என்று கூறியதோடு, நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

    பின்வாங்கிய ஷாருக்

    பின்வாங்கிய ஷாருக்

    தற்போது, மாதவனை அழைத்து தனக்கு இந்தக் கதை சரிவராது என்று கூறியுள்ளார். இதையடுத்து, தற்போது விஜய் சேதுபதியாக நடிக்க வேறொரு பாலிவுட் நடிகரை மாதவன் தேடி வருகிறாராம்.

    ஏன் ஷாருக் விலகினார்

    ஏன் ஷாருக் விலகினார்

    ஷாருக்கான் 'விக்ரம் வேதா' ரீமேக்கிலிருந்து விலகியதற்குக் காரணம் இதற்கு முன்னதாக அவர் நடித்த 'ஃபேன் மூவி' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும், 'விக்ரம் வேதா' கிளைமேக்ஸ் காட்சியும் ஒரே மாதிரியாக இருப்பது தானாம்.

    ரசிகர்களுக்குப் பிடிக்காது

    ரசிகர்களுக்குப் பிடிக்காது

    அதனால், மறுபடியும் இது போன்ற கதையில் நடித்தால், தன்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்காது என்று கூறி இப்படத்தின் ரீமேக்கிலிருந்து முன்கூட்டியே விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

    English summary
    Vijay Sethupathi and Madhavan acted in 'Vikram Vedha' directed by Pushkar - gayatri. Madhavan planned to remake this film in Hindi, spoke to Shahrukh Khan to act in the character of Vijay sethupathi. Shah rukh khan, who agreed to act, has now dismissed the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X