»   »  தனுஷின் தங்கமகனுடன் "தில்" மோதலில் ஷாரூக்கான்

தனுஷின் தங்கமகனுடன் "தில்" மோதலில் ஷாரூக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனுஷின் தங்கமகன் திரைப்படத்திற்கு தனது தில்வாலே படத்தின் மூலம் கடுமையான டப் கொடுத்து வருகிறார் ஷாரூக்கான்.

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தங்கமகன். மழை, வெள்ளம் காரணமாக தமிழில் பல படங்கள் தள்ளிப் போன நிலையில் தனது தங்கமகன் படத்தை இன்று வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.


Shah Rukh Khan's Dilwale Clash with Thanga Magan

தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கும் இப்படத்திற்கு பெங்களூரில் பெரும் போட்டியாளராக மாறியிருக்கிறார் ஷாரூக்கான்.


பெங்களூரில் 250 திரையரங்குகளில் ஷாரூக் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே வெளியாகி இருக்கிறது. அதே நேரம் தனுஷின் தங்கமகன் வெறும் 90 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி இருக்கிறது.


பெங்களூரில் வெளியாகும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஒரு முழுபக்க அளவில் தில்வாலே படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.


மேலும் பல்வேறு வழிகளிலும் தில்வாலே படத்தை அப்படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். படக்குழுவினர் செய்த இந்த விளம்பரங்களுக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.


முதல் நாளான இன்று தில்வாலே சுமார் 1.2 கோடிகளை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கமகன் வசூல் நிலவரம் இன்னும் வெளியாகவில்லை.


எனினும் முதல்வார இறுதியில் தில்வாலே நல்ல வசூலைக் குவிக்கும் என்று தியேட்டர் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.


தற்போதைய நிலவரப்படி வரும் நாட்களில் திரையரங்குகள், வசூல் என்று எல்லாவற்றிலும் ஷாரூக்கானின் ஆதிக்கம் பெங்களூரில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Bengaluru:Shah Rukh Khan's Dilwale Clash with Dhanush's Thanga Magan. Now Shah rukh khan give more tough for Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil