Don't Miss!
- News
தேடி வந்த காலம் போய் ஆதரவை தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே.. அதிமுக குறித்து பூங்குன்றன் வேதனை
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Pathaan Box Office Prediction: பாலிவுட்டை மீண்டும் தூக்கி நிறுத்துமா பதான்? முதல் நாள் வசூல் கணிப்பு
மும்பை: ஷாருக்கான் ஹீரோவாக பாலிவுட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடிக்கவில்லை. கடந்த ஆண்டு பல படங்களில் கேமியோவாக நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் நாளை வெளியாகிறது. அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வசூல் வேட்டை ஆடினாலும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவில்லை. ஆனால், நாளை வெளியாகும் பதான் திரைப்படம் பாலிவுட்டில் இந்த ஆண்டின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளிலேயே 50 கோடி வரை படம் வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பீஸ்ட்
விஜய்க்கே
டஃப்
கொடுத்த
ஷாருக்கான்...
பதான்
ட்ரெய்லரை
வச்சு
செய்யும்
நெட்டிசன்கள்...

4 ஆண்டுகளுக்கு பிறகு
ஷாருக்கானின் ஜீரோ படம் கடந்த 2018ல் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான படங்களிலேயே தீபிகா படுகோன் உடன் அவர் இணைந்து நடித்த ஹேப்பி நியூ இயர் படம் தான் அதிக வசூல் ஈட்டியது. இந்நிலையில், மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் நாளை ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார்.

கேமியோ ரோலில் கலக்கினார்
கடந்த ஆண்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஷாருக்கான் நிறைய கேமியோ ரோலில் நடித்து அசத்தினார். அமீர்கானின் லால் சிங் சத்தா, மாதவனின் ராக்கெட்ரி, ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட படங்களில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

பிகினி சர்ச்சை
ஷாருக்கானின் பெஷாராம் ரங் பாடல் வெளியான நிலையில், அந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்து படு ஆபாசமாக நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்பினர் சிலர் ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்தும் படத்தில் தப்பு இருந்தால் ஷாருக்கானையே எரித்து விடுவோம் என்றும் மிரட்டினர். ஆனால், பதான் ட்ரெய்லரில் இந்தியாவுக்காக போராடும் ஏஜென்ட்டாக நடித்து ஜெய்ஹிந்த் சொல்லி அந்த சர்ச்சையை சரி கட்டி இருந்தார்.

4.5 லட்சம் டிக்கெட் விற்பனை
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஷாருக்கானின் பதான் படத்திற்கு முன் பதிவாக 4.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இன்று மாலைக்குள் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தால் கேஜிஎஃப் 2 படத்தின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக பாகுபலி 2 படம் இந்தியாவில் முதல் நாளில் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது எனக் கூறுகின்றனர்.

50 கோடி வசூல்
இந்தி பெல்ட்டில் கேஜிஎஃப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய வெற்றி பெற்றது. ஆனால், பாலிவுட் படங்களே பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. ஆனால், நாளை வெளியாக உள்ள பதான் திரைப்படம் 45 கோடி முதல் 50 கோடி வசூலை முதல் நாளில் டொமஸ்டிக்கில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கோடி சாத்தியமா
ஓவர்சீஸில் நடிகர் ஷாருக்கானின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், பதான் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி வசூலை தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் 400 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், ஷாருக்கானின் பதான் திரைப்படம் 500 கோடி வசூலை அசால்ட்டாக கிராஸ் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.