Pathaan: அமீர்கானால் முடியாததை சாதித்த ஷாருக்கான்.. கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டிய பதான்!
மும்பை: கடந்த சில ஆண்டுகளாக அதாவது ஷாருக்கானின் படம் வெளியாகாத 4 ஆண்டுகளாக பாலிவுட் மிகவும் பரிதாப நிலையில், இருந்து வந்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் திரைப்படம் மற்றும் பிரம்மாஸ்திரா உள்ளிட்ட படங்கள் தான் 400 கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டின.
கேஜிஎஃப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. முதல் நாளிலேயே 50 கோடி வசூலை அந்த படம் தட்டித் தூக்கியது.
பல பெரிய பாலிவுட் படங்களின் லைஃப் டைம் வசூலே அந்த 50 கோடி கூட வரமுடியாமல் தவித்து வந்த நிலையில், ஜனவரி 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமீர்கான் சாதிக்கவில்லை
தங்கல் படத்தின் மூலம் 2000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி பாகுபலி படத்தின் வசூலையே ஓடவிட்ட அமீர்கான் நிச்சயம் லால் சிங் சத்தா படத்தின் மூலம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெளியான அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

அக்ஷய் குமார் சொதப்பல்
அக்ஷய் குமார் 2 மாதத்திற்கு ஒரு படம் என்கிற ரீதியில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் செய்து தள்ளினாரே தவிர பாக்ஸ் ஆபிஸில் ஒரு மிகப்பெரிய ஹிட் கூட அக்ஷய் குமாரால் கொடுக்க முடியவில்லை. அதே நிலைமை தான் அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ரன்வே படத்திற்கும் ஏற்பட்டது. ஆனால், அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம் 2 ரீமேக் 200 கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்தது.

பாலிவுட்டில் ராக்கி பாய் கோட்டை
கடந்த ஆண்டு 1300 கோடி வரை உலகளவில் வசூல் செய்த நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப்2 திரைப்படம் பாலிவுட்டில் மட்டும் 500 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை ஆடி இருந்தார். கடந்த ஆண்டு பல இந்தி திரைப்படங்களே அந்த வசூலை அடைய பெரும் முயற்சி செய்து தோற்றன.

சொல்லி அடித்த ஷாருக்கான்
இந்நிலையில், 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹீரோவாக பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ள ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் முதல் நாளிலேயே 55 கோடி வசூலை இந்தி பெல்ட்டில் மட்டும் எடுத்து அசத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் ஓவர்சீஸ் என ஒட்டுமொத்தமாக ஷாருக்கானின் பதான் படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி உள்ளதாக கூறுகின்றனர்.

500 கோடி டார்கெட்
ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், படத்தின் மொத்த வசூல் 500 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் மட்டுமின்றி கேமியோவாக வரும் டைகர் சல்மான் கானின் காட்சி தியேட்டரில் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. பாலிவுட் இஸ் பேக் என்றும் நல்ல படங்கள் வந்தால் பாய்காட் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











