»   »  உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்

உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கான்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய கங்கனா ரனாவத்துடன் நடிக்க மறுத்துள்ளார் ஷாருக்கான்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவார். இதனாலேயே பல நேரம் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார். அப்படி மனதில் பட்டதை பேசியதால் பட வாய்ப்பு ஒன்று அவர் கையை விட்டு போயுள்ளது.

அதுவும் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நழுவியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி

சஞ்சய் லீலா பன்சாலி

ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் சஞ்சய் என்னிடம் பேசியுள்ளார். இது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கங்கனா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

கான்கள்

கான்கள்

சஞ்சய் படம் பற்றி பேசிய பிறகு கங்கனா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சல்மான் கான், ஆமீர் கான், ஷாருக்கான் இந்த கான்களில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கரண் கேட்டதற்கு யாரும் இல்லை என பதில் அளித்தார் கங்கனா.

ஷாருக்கான்

ஷாருக்கான்

சஞ்சய் கங்கனாவிடம் சொன்ன கதையில் நடிக்க மறுத்துள்ளார் ஷாருக்கான். மாறாக சஞ்சய் கூறிய மற்றொரு கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஹீரோயின்

ஹீரோயின்

கங்கனா கண்டபடி பேசிய பிறகு அவரை தன் பட ஹீரோயினாக்க சஞ்சய் லீலா பன்சாலியும் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர்.

English summary
A few months ago, Kangana Ranaut had herself revealed that Sanjay Leela Bhansali had approached her for a period film opposite superstar Shahrukh Khan. According to a report in Business Of Cinema, now Kangana Ranaut will not be a part of the film anymore because King Khan is not interested to work with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil