»   »  பாகுபலி... என்ன ஒரு கடின உழைப்பு: ஷாருக் பாராட்டு

பாகுபலி... என்ன ஒரு கடின உழைப்பு: ஷாருக் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி படத்தைப் பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பாகுபலி. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

பாகுபலியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஹாலிவுட்டே திணறிப் போயுள்ளது. அந்தளவிற்கு வெளிநாடுகளில் வசூல் மழை பொழிந்துள்ளது பாகுபலி.

ஷாருக் பாராட்டு...

இந்நிலையில், பாகுபலி படத்தைப் பார்த்து விட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

என்ன ஒரு கடின உழைப்பு...

என்ன ஒரு கடின உழைப்பு...

அந்தப் பதிவில் அவர், "பாகுபலி... என்ன ஒரு கடின உழைப்பு. இதில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். பாய முடியும் என நாம் முடிவு செய்தால் மட்டுமே உங்களால் வானத்தை அடைய முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

தில்வாலே ஷூட்டிங்...

தில்வாலே ஷூட்டிங்...

சமீபத்தில் தான் பல்கேரியாவில் நடந்த தில்வாலே பட ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார் ஷாருக். இப்படத்தில் ஷாருக்கின் ஜோடியாக கஜோல் நடித்து வருகிறார்.

பாகுபலி...

பாகுபலி...

ஷூட்டிங்கிற்காக பல்கேரியா சென்றிருந்ததால், தனது குழந்தைகளைப் பிரிந்திருந்த ஷாரூக், மும்பை திரும்பியதும் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடத் தொடங்கி விட்டார். குழந்தைகளுடன் சென்று அவர் பாகுபலி படம் பார்த்தார்.

ஹேப்பி...

குழந்தைகளுடனான தனது பொழுதுகள், நிலா, சூரியன், நட்சத்திரம் அனைத்தின் கீழும் ஒரே நேரத்தில் வாழ்ந்தது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரங்கல்...

இரங்கல்...

மேலும் ஒரு டிவிட்டில் பஞ்சாப் தாக்குதல் குறித்து, கலாம் மரணம் குறித்தும் ஷாருக் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

English summary
"Baahubali what a hard worked at film. 2 every1 involved thanx for the inspiration. U can only reach the sky if u r willing to take the leap!" Shah Rukh Khan tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil